புல்லையும் மேய்ந்த கவரிமாக் குவளைப்பூவையுடைய பசிய சுனையின் நீரை நுகர்ந்து அதன் பக்கத்தவாகிய தகரமரத்தினது குளிர்ந்த நிழலின்கண் தனது பிணையுடனே தங்கும் வடதிசைக் கண்ணதாகிய வானைப் பொருந்தும் இமயமலையும் தென்றிசைக்கண் ஆய்குடியும் இல்லையாயின் இந்தப் பரந்த இடத்தையுடைய உலகம் கீழ்மேலதாகிக் கெடும்-எ-று,
|
|
'முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளினேன்' என உள்ளம் ஆழ்தற்குக்காரணங் கூறினமையால், பிறரைப்புகழ்ந்த நாவெனவும், பிறர்புகழ் கேட்ட செவியெனவும் ஏனையவற்றிற்கும் காரணம் வருவித்து உரைக்கப்பட்டது,
|
|
அன்றி வடதிசை தேவருலகோடு ஒத்தலான், இமயத்தால் தாங்க வேண்டுவதில்லை; தென்றிசைக்கண் ஆய்குடி தாங்கிற்றில்லையாயின்,
|
|
இவ்வுலகு பிறழும்; அதனால் இமயத்துக்கு முன்னுள்ளப்படுவோனைப் பின்னுள்ளினேனாதலால், எனது உள்ளம் ஆழ்க; எனது நாப் போழ்க; எனது செவி தூர்வதாக வென்றதாக்கி உரைப்பினும் அமையும்.
|
|
 |