திணை - அது; துறை - இயன்மொழி. (பாடாண்டிணை)
அவனை அவர் பாடியது.
(இ-ள்.) இப்பிறப்பின்கட் செய்ததொன்று மறுபிறப்பிற்கு
உதவுமென்று கருதிப் பொருளை விலையாகக் கொடுத்து அதற்கு
அறங்கொள்ளும் வணிகன் ஆய் அல்லன்; அமைந்தோர் பிறரும்
போயவழியென்று உலகத்தார் கருத அந்த நற்செய்கையிலே பட்டது,
அவனது கைவண்மை-எ - று.
அன்றி, ஆய் அறவிலை வணிகன் அல்லன்; பிறரும் சான்றோர்
சென்ற நெறியெனக் கருதி அச்செய்கையிலே பட்டதன்று, அவன்
கைவண்மை யென்றுரைப்பாரும் உளர். இதற்குப் பட்டன்றென்பது
மறைப்பொருள் படாமையின், பட்டதன்றென்பது பட்டன்றென
விகாரமாகக் கொள்க.
(135) கொடுவரி வழங்குங் கோடுயர் நெடுவரை
அருவிடர்ச் சிறுநெறி யேறலின் வருந்தித்
தடவரல் கொண்ட தகைமெல் லொதுக்கின்
வளைக்கை விறலியென் பின்ன ளாகப்
பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
வரிநவில் பனுவல் புலம்பெயர்ந் திசைப்பப்
படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ்
ஒல்க லுள்ளமொ டொருபுடைத் தழீஇப்
புகழ்சால் சிறப்பினின் னல்லிசை யுள்ளி
வந்தனெ னெந்தை யானே யென்றும
மன்றுபடு பரிசிலர்க் காணிற் கன்றொடு
கறையடி யானை யிரியல் போக்கும்
மலைகெழு நாடன் மாவே ளாஅய்
களிறு மன்றே மாவு மன்றே
ஒளிறுபடைப் புரவிய தேரு மன்றே
பாணர் பாடுநர் பரிசில ராங்கவர்
தமதெனத் தொடுக்குவ ராயி னெமதெனப்
பற்ற றேற்றாப் பயங்கெழு தாயமொ
டன்ன வாகநின் னூழி நின்னைக்
காண்டல் வேண்டிய வளவை வேண்டார்
உறுமுரண் கடந்த வாற்றற்
பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே.
திணை - அது; துறை - பரிசிற்றுறை. (பாடாண்டிணை)
அவனை அவர் பாடியது.
(இ-ள்.) புலி இயங்கும் சிகரம் உயர்ந்த நெடிய மலையின்கண்
ஏறுதற்கரிய பிளப்பின்கட் சிறியவழியை யேறுதலான் வருத்தமுற்று
உடல் வளைவைப் பொருந்திய பயில அடியிட்டு நடக்கின்ற மெல்லிய
நடையினையுடைய வளையையணிந்த கையையுடைய விறலி
என்பின்னே வரப்பொன்னைக் கம்பியாகச்செய்தாற் போன்ற முறுக்