புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   425
Zoom In NormalZoom Out

ஆயென்று  பிறர்  சொல்லவென்றும்,   ‘எமக்கீவோர்   பிறர்க்கீவோர்'
என்பதற்கு   எமக்கீவோர்   எம்   வறுமைகண்டு   வருத்தமுறுவோர்
யாவர்க்கும்   ஈவோரெனவும்,  'பிறர்க்கீவோர்  தமக்கீப'  என்பதற்குப்
பிறர்க்குக்   கொடுப்போர்    அக்கொடுக்கப்படுகின்றோர்    தமக்கே
கொடுப்போராவரெனவும் உரைப்பாரும் உளர்.
 

கசிவுற்றவென்பதற்கு இரக்கமுற்றவெனினும் அமையும். 

பேஎற்பகையெனவென்புழி    எனவும்   ஆங்கெனைப்பகையுமென்புழி
ஆங்கும் அசைநிலை.
 

கண்   தெண்ணீரின்  மல்கியெனவும்,  வாயாரப்  பெயரேத்தியெனவும்
மாற்றப்பட்டன.
 

(137) இரங்கு முரசி னினஞ்சால் யானை
முந்நீ ரேணி விறல்கெழு மூவை
இன்னு மோர்யா னவாவறி யேனே
நீயே, முன்யா னறியு மோனே துவன்றிய
கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது
கழைக்கரும்பி னொலிக்குந்து
கொண்டல் கொண்டநீர் கோடை காயினும்
கண்ணன்ன மலர்பூக்குந்து
கருங்கால் வேங்கை மலரி னாளும்
பொன்னன்ன வீசுமந்து
மணியன்னநீர் கடற்படரும்
செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந
சிறுவெள் ளருவிப் பெருங்க னாடனை
நீவா ழியர்நின் றந்தை
தாய்வா ழியர்நிற் பயந்திசி னோரே.
 

திணை   -   அது;  துறை   -   இயன்மொழி,   பரிசிற்றுறையுமாம்.
(பாடாண்டிணை)
 

நாஞ்சில்வள்ளுவனை ஒருசிறைப் பெரியனார் பாடியது.

(இ-ள்.)   ஒலிக்கும்   முரசினையும்   இனம் அமைந்த யானையையும்
உடைய கடலாகிய எல்லையையுடைய நிலத்தின்கண் வென்றிபொருந்திய
மூவேந்தரை  இன்னமும்  யான்  ஒருவனே பாடும் அவாவையறியேன்;
நீதான்  முன்னே  தொடங்கி  யானறியுமவன்;  நீர்நிறைந்தபள்ளத்தின்
கண்   விதைத்த   வித்து   நீரின்மையாற்   சாவாது  கரும்புபோலத்
தழைக்கும்,  மழையால்  முகந்து சொரியப்பட்ட நீர் கோடை காயினும்
மகளிர் கண்போன்ற குவளை முதலிய மலர்பூக்கும், கரியதாளையுடைய
வேங்கைமலரின்  நாடோறும்  பொன்போலும் அப்பூவைச் சுமந்துமணி
போலும்   நீர்  கடற்கட்செல்லும்  செவ்விய  மலைப்பக்கத்தையுடைய
நாஞ்சிலென்னும்    மலையையுடைய    பொருந!    சிறிய   வெளிய
அருவியையுடைய   பெரிய  மலையையுடைய  நாட்டையுடையாய்!  நீ
வாழ்வாயாக;   நின்னைப்   பெற்றோராகிய  நின்  தந்தையும்  தாயும்
வாழ்க-எ-று.
 

நீர்  மலர்பூக்குமென   இடத்துநிகழ்பொருளின்தொழில்   இடத்துமேல்
ஏறிநின்றது.
 

கோடைக்காயினுமென்பது பாடமாயின்