|
மாயா வுள்ளமொடு பரிசி றுன்னிக்
கனிபதம் பார்க்குங் காலை யன்றே
ஈத லானான் வேந்தே வேந்தற்குச்
சாத லஞ்சாய் நீயே யாயிடை
இருநில மிளிர்ந்திசி னாஅங் கொருநாள்
அருஞ்சமம் வருகுவ தாயின்
வருந்தலு முண்டென் பைதலங் கடும்பே.
திணை - அது; துறை - பரிசில் கடாநிலை. (பாடாண்டிணை)
அவனை
அவர் பாடியது. (இ-ள்.) தோள் வடுப்படப் பலமுட்டுக்களையும் காவிய (காவிய - சுமந்த) சிலவாய மயிரையுடைய பல இளையோரும் அடி வருந்த நெடும்பொழுது ஏறிய கொடிபோலும் இடையினையுடைய விறலியரும் என இவர் வாழ்தலை விரும்பிப் பொய்சொல்லேன்; மெய்சொல்லுவேன்; புறக்கொடாத மேற்கோளையுடைய வலியோர் மரபிலுள்ளானே! உயர்ந்த உச்சியையுடையதாய் உழப்படாத நாஞ்சிலென்னும் பெயரையுடைய மலைக்கு வேந்தே! மறவாத நினைவுடனே பரிசிற்குவந்து பொருந்திப் பின்புநின்று நின்மனம் நெகிழும் செவ்வி பார்க்கும்காலமல்ல, யான் வறுமையுற்று நிற்கின்ற நிலைமை; நினக்கு வேண்டிற்றுத்தருதலை அமையான், நின்னுடைய அரசன்; அவ்வரசன் பொருட்டுச்சாதலுக்கு அஞ்சாய், நீ; அவ்விடத்துப் பெரிய நிலம் பிறழ்ந்தாற்போல ஒருநாள் பொறுத்தற்கரிய பூசல் வருவதாயின், வருந்துதலும் உளதாம், எனது பசித்துன்பத்தையுடைய சுற்றம்-எ - று. அதனாற் போர்வருவதன்முன்னே பரிசில்தந்து விடுவாயாகவென்பது கருத்து. வேந்து என்றது சேரனை.
(140)
தடவுநிலைப் பலவி னாஞ்சிற் பொருநன
மடவன் மன்ற செந்நாப் புலவீர்
வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறை யாக யாஞ்சில
அரிசி வேண்டினெ மாகத் தான் பிற
வரிசை யறிதலிற் றன்னுந் தூக்கி
இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர்
பெருங்களிறு நல்கி யோனே யன்னதோர்
தேற்றா வீகையு முளதுகொல்
போற்றா ரம்ம பெரியோர்தங் கடனே.
திணை - அது; துறை - பரிசில்விடை. (பாடாண்டிணை)
அவனை
ஒளவையார் பாடியது. (இ-ள்.) பெரிய நிலைமையையுடைய பலாமரத்தையுடைத்தாய
நாஞ்சின்மலைக்கு வேந்தன், அறிவுமெல்லியன், நிச்சயமாக' செவ்விய
நாவையுடைய புலவீர்! வளையணிந்த கையையுடைய விறலியர்
மனைப் பக்கத்தின்கட் பறித்த இலைக்குமேல் தூவுவதாக யாங்கள் சில
அரிசி வேண்டினேமாக, தான் பரிசிலர்க்கு உதவும் வரிசை அறிதலால்
எம் வறுமையைப் பார்த்தலேயன்றித் தனது மேம்
|