பேகன்; அவன் கைவண்மை மறுமைநோக்கிற்றன்று; பிறர் வறுமை நோக்கிற்றெனக் கூட்டுக. ‘நின்னினும் புல்லியேமன்' என்பது, ‘பண்டுகாடுமன்' என்பது போல நின்றது. ஒழிந்த மன் : அசைநிலை.
(142)
அறுகுளத் துகுத்து மகல்வயற் பொழிந்தும்
உறுமிடத் துதவா துவர்நில மூட்டியும்
வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்காற் பேகன்
கொடைமடம் படுத லல்லது
படைமடம் படான்பிறர் படைமயக் குறினே.
திணை - அது; துறை - இயன்மொழி. (பாடாண்டிணை) அவனை அவர் பாடியது. (இ-ள்.) வற்றிய குளத்தின்கண்ணே பெய்தும் அகன்ற விளை நிலத்தின்கண்ணே சொரிந்தும் இவ்வாறு குளத்தும் விளைநிலத்தும் பெய்யாது களர்நிலத்தை நிறைத்தும் எவ்விடத்தும் வரையாத மரபினையுடைய மழைபோல மதமிக்க யானையினையுடைய கழல்புனைந்த காலையுடைய பேகன் கொடையிடத்துத் தான் அறியாமைப்படுதலல்லது பிறர் படை வந்து கலந்துபொரின் அப்படையிடத்துத் தான் அறியாமைப்படான்-எ - று. படைமடமென்றது, வீரரல்லாதார்மேலும், முதுகிட்டார்மேலும் புண்பட்டார்மேலும் மூத்தார் இளையார்மேலும் செல்லுதல்.
(143)
மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய்
மாரி யான்று மழைமேக் குயர்கெனக்
கடவுட் பேணிய குறவர் மாக்கள்
பெயல்கண் மாறிய வுவகையர் சாரற்
புனத்தினை யயிலு நாட சினப்போர்க்
கைவள் ளீகைக் கடுமான் பேக
யார்கொ லளிய டானே நெருநற்
சுரனுழந்து வருந்திய வொக்கல் பசித்தெனக்
குணில்பாய் முரசி னிரங்கு மருவி
நளியிருஞ் சிலம்பிற் சீறூ ராங்கண்
வாயிற் றோன்றி வாழ்த்தி நின்று
நின்னுநின் மலையும் பாட வின்னா
திகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
முலையக நனைப்ப விம்மிக்
குழலினை வதுபோ லழுதனள் பெரிதே.
திணை - பெருந்திணை; துறை - குறுங்கலி; தாபதநிலையுமாம். அவனால் துறக்கப்பட்ட கண்ணகி
|