புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   428
Zoom In NormalZoom Out

 தற் றொழுதனம் வினவக் காந்தள்
முகைபுரை விரலிற் கண்ணீர் துடையா
யாமவன் கிளைஞரே மல்லேங் கேளினி
எம்போ லொருத்தி நலனயந் தென்றும்
வரூஉ மென்ப வயங்குபுகழ்ப் பேகன்
ஒல்லென வொலிக்குந் தேரொடு
முல்லை வேலி நல்லூ ரானே.

திணையும் துறையும் அவை. (பெருந்திணை, குறுங்கலி) 

அவனை அவள்காரணமாகப் பரணர் பாடியது.

(இ-ள்.)  அருள்பண்ணாயாதல்   கொடிது;    மாலைக்காலம்   வந்த
அளவிலே   சிறிய   யாழை  இரங்கற்பண்ணாகிய  செவ்வழியென்னும்
பண்ணிலே  வாசிக்கும் பரிசு பண்ணி நினது மழையையேற்றுக்கொண்ட
காட்டைப்  பாடினேமாக,  நீலநறுநெய்தல்போன்று பொலிந்த மையுண்ட
கண்கள்  கலங்கி  வீழ்ந்த இடைவிட்ட துளிகள் பூணையுடைய மார்பை
நனைப்ப        வருந்துதல்      அமையாளாக,      'இளையோய்!
கிளைமையையுடையையோ        எம்முடைய        கேண்மையை
விரும்புவோனுக்கு?'  என  யாங்கள்  தன்னை வணங்கிக் கேட்டேமாக,
அவள்,   காந்தள்மொட்டுப்போலும்   விரலாலே   தன்  கண்ணீரைத்
துடைத்து,  'நாங்கள் அவனுடைய கிளைஞரேமல்லேம்; கேட்பாயாக, நீ
இப்பொழுது  :  எம்மை  ஒப்பாளொருத்தியுடைய அழகைக் காதலித்து
எந்நாளும்  வருமென்று பலரும் சொல்லுவர், விளங்கிய புகழையுடைய
பேகன்,   ஒல்லெனமுழங்கும்  தேருடனே  முல்லை  வேலியையுடைய
நல்லூரின்கண்' என்று கூறினாள்-எ - று.

கிளையையோவென    ஓகாரமும்,     என்றாளென    ஒருசொல்லும்
வருவித்து உரைக்கப்பட்டன.

நின்  கானம்  பாடினேமாக,  இனைதலானாளாக, யாம்  தற்றொழுதனம்
வினவ,   தன்கண்ணீர்   துடைத்துப்   பேகன்  ஒருத்திநலன்  நயந்து
நல்லூரின்கண்     என்றும்     வரூஉமென்பவென்றாள்;    அவளை
அருளாயாதல் கொடிதெனக் கூட்டி வினைமுடிவுசெய்க.

எம்போலொருத்தி  யென்றது,  உவமை கருதாது வன்மையுரை தோன்ற
நின்றது; எம்மைப்போலும் பொதுமகளொருத்தியென அவளை இழித்துக்
கூறியவாறுமாம்.

இனி,   யாம்  தற்றொழுதனம்  வினவினேமாக, அவள் ஆயத்தார் தம்
விரலால்    அவள்    கண்ணீரைத்    துடைத்து    யாம்    அவன்
கிளைஞரேமல்லேம்;  இது  புகுந்தவாறு  யாம்  கூறக் கேளென முன்பு
கூறிப்     பின்    பேகன்    எம்போலொருத்தி    நலன்    நயந்து
நல்லூரின்கட்சென்று