புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   429
Zoom In NormalZoom Out

வாயாரநின் னிசைநம்பிச்
சுடர்சுட்ட சுரத்தேறி
இவண்வந்த பெருநசையேம்
எமக்கீவோர் பிறர்க்கீவோர்
பிறர்க்கீவோர் தமக்கீபவென
அனைத்துரைத்தனன் யானாக
நினக்கொத்தது நீநாடி
நல்கினை விடுமதி பரிசி லல்கலும்
தண்புனல் வாயிற் றுறையூர் முன்றுறை
நுண்பல மணலினு மேத்தி
உண்குவம் பெருமநீ நல்கிய வளனே.

திணை - அது; துறை - பரிசில்கடாநிலை. (பாடாண்டிணை) 

அவனைத் துறையூர் ஓடைகிழார் பாடியது. 

(இ-ள்.)   யாழ்ப்பத்தரினது   புறத்தையொப்ப    இழைசூழ்ந்த   பல
தையலினது இடைக்கண் உளவாகிய புரைகளைப்பற்றி ஒன்றோடொன்று
தொடர்ந்த  பிணிப்பு விடாதே கிடக்கின்ற ஈரினது திரளோடு தங்குதல்
மிக்க  பேனாகிய பகையை ஒரு பகையென்பேனோ? உண்ணாமையின்,
உடம்பு புலர்ந்து கண் தெளிந்தநீரால் நிறைந்து வியர்ப்புற்ற எனது பல
சுற்றத்தோடு

பசிநோய்     வருத்தும்   பகையை    ஒரு     பகையென்பேனோ?
அப்பெற்றிப்பட்ட       எனது       இயல்பையும்     அறியாராய்
நின்கைப்பொருளைத்தாவென்று    சொல்லி   எம்முடைய   நிலைகள்
தளரும்படி  மரங்கள்  செறிந்த  குளிர்ந்த  மலையிற்  குரங்குபோலப்
பறித்துக்கொள்ளும்  இயல்பையுடைய  புல்லிய  குறிய ஆறலைகள்வர்
பரந்து  வந்து அலைக்கும் பகையை ஒரு பகை என்பேனோ? எல்லாப்
பகையும்  அறிவான்  ஆயேயெனக்  கருதி எமது வாக்கினால் மிகவும்
நினது  பெயரைவாழ்த்தி நின்னுடைய புகழை நச்சி ஞாயிறு சுடப்பட்ட
சுரத்தின் கண்ணே யேறி இவ்விடத்துவந்த பெரிய நச்சுதலையுடையேம்;
இங்ஙனம்,    வறுமையுற்ற   எங்களுக்கு   ஒன்றை  இடுவோரன்றோ
பயன்கருதாது  பிறர்க்கு  இடுமவர்களாவாரெனவும்  எம்மை யொழிந்த
பிறர்க்கு     இடுவாரன்றோ     பயன்கருதியிடுதலால்   தங்களுக்கே
இடுவோரெனவும்    அவ்வளவாகயான்    சொன்னேனாக,  நினக்குப்
பொருந்தியது நீ ஆராய்ந்து எமக்குப் பரிசில் தந்தனையாய்விடுவாயாக;
நாடோறும்,    குளிர்ந்த    நீர்    ஓடும்   வாய்த்தலைகளையுடைய
துறையூரின்கண்   துறைமுன்னர்  நுண்ணிய  பலமணலினும்  பலநாள்
வாழ்கவென வாழ்த்திஉண்பேம், பெரும! நீ தந்த செல்வத்தை-எ - று.
 

பெரும!  நீ  நல்கிய  வளத்தை  அல்கலும்  ஏத்தி உண்பேம்; நினக்கு
ஒத்தது நீ நாடிப் பரிசில் நல்கினை விடுமதியெனக் கூட்டுக.
 

‘ஆயென’ என்பதற்கு