புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   430
Zoom In NormalZoom Out

கோடைக்கட்காயினுமென்றானும்       கோடைக்கணாயினுமென்றானும்
உரைக்க.முன்னின்ற பெயரெச்சம் மூன்றும் நாஞ்சிலென்னும் நிலப்பெயர்
கொண்டன.

தன்   பழமை  தோன்றப்  புகழ்ந்து  கூறுவான்,  மூவரையும்  பாடும்
அவாவை இன்னும் அறியேனென்றதாகக் கொள்க.
 

(138) ஆனினங் கலித்த வதர்பல கடந்து
மானினங் கலித்த மலைபின் னொழிய
மீனினங் கலித்த துறைபல நீந்தி
உள்ளி வந்த வள்ளுயிர்ச் சீறியாழ்
சிதாஅ ருடுக்கை முதாஅரிப் பாண
நீயே பேரெண் ணலையே நின்னிறை
மாறி வாவென மொழியலன் மாதோ
ஒலியிருங் கதுப்பி னாயிழை கணவன்
கிளிமரீஇய வியன்புனத்து
மரனணி பெருங்குர லனைய னாதலின்
நின்னை வருத லறிந்தனர் யாரே.

திணை - அது; துறை - பாணாற்றுப்படை. (பாடாண்டிணை) 

அவனை மருதனிளநாகனார் பாடியது. 

(இ-ள்.)   பெற்றத்தினது  இனம்  மிக்க  வழிபலவும் வந்து மான்றிரள்
மிக்கமலை     பின்கழிய    மீனினந்தழைத்த     துறைபலவற்றையும்
நீந்திநினைந்து  வந்த வள்ளிய ஓசையையுடைத்தாகிய சிறிய யாழையும்
சிதாராகிய உடையையுமுடைய மூத்தபாணனே! நீதான், அவன்பாற் சில
கருதிப்  போகின்றமையின் பெரிய எண்ணத்தையுடையை; நின்னுடைய
தலைவன்  இப்பொழுது  போய்ப்  பின்  ஒருநாட் பரிசிற்குவாவென்று
சொல்லான்;  தழைத்த கரிய கூந்தலையுடைய ஆயிழைக்குத் தலைவன்,
கிளி  மருவிய  அகன்ற  புனத்தின்கண் மரப்பொதும்பின்கண் வைத்த
பெரிய    கதிரை    யொப்பனாதலின்,    நீ    அவன்பாற்  பரிசில்
பெற்றுவருதற்கண் நின்னைப் பழையபாணனென்று அறிவார்  யார்? -
எ-று.
 

'நின்னை   வருதலறிந்தனர்   யார்'   என்றதன்   கருத்து,  நின்னை
அறிவாரும் அறியாத தன்மையையாவை யென்பதாம்.

அறிவார் யாரென்பது அறிந்தனர் யாரெனக் காலமயக்கமாயிற்று. 

நினக்கு     அவன்      பரிசில்      தப்பாமல்     தருமென்பான்,
நின்னிறையென்றான்.
 

'கிளி..........குரலனையன்'     என்றது     கிளியீடு
வாய்த்தாற்போல்வனென்னும் வழக்கைப்பற்றி நின்றது.
 

(139) சுவலழுந்தப் பலகாய
சில்லோதிப் பல்லிளைஞருமே
அடிவருந்த நெடிதேறிய
கொடிமருங்குல் விறலியருே
வாழ்தல் வேண்டிப்
பொய்கூறேன் மெய்கூறுவல்
ஓடாப் பூட்கை யுரவோர் மருக
உயர்சிமைய வுழாஅ நாஞ்சிற் பொருந