புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   434
Zoom In NormalZoom Out


நீசென்று       களைதல்;       அதனைச்      செய்வாயாகவெனக்
கூட்டியுரைப்பினும் அமையும்.

'பனிக்குமென்றஞ்சி' என்பதூஉம் பாடம்.

(146) அன்ன வாகநின் னருங்கல வெறுக்கை
அவைபெறல் வேண்டே மடுபோர்ப் பேக

சீறியாழ் செவ்வழி பண்ணிநின் வன்புல

நன்னாடு பாட வென்னை நயந்து

பரிசி னல்குவை யாயிற் குரிசினீ

ல்கா மையி னைவரச் சாஅய்

அருந்துய ருழக்குநின் றிருந்திழை யரிவை

கலிமயிற் கலாவங் கால்குவித் தன்ன

ஒலிமென் கூந்தற் கமழ்புகை கொளீஇத்

தண்கமழ் கோதை புனைய

வண்பரி நெடுந்தேர் பூண்கநின் மாவே.

திணையும் துறையும் அவை. (பெருந்திணை, குறுங்கலி)

அவனை அவள் காரணமாக அரிசில்கிழார் பாடியது.

(இ-ள்.)   அத்தன்மையவாக;   நின்னால்  தரப்பட்ட   பெறுதற்கரிய
ஆபரணமும்  செல்வமுமாகிய அவைபெறுதலை விரும்பேம்; கொல்லும்
போரையுடைய  பேக!  சிறிய யாழைச் செவ்வழியாகப்பண்ணி வாசித்து
நினது   வலிய  நிலமாகிய  நல்ல  மலைநாட்டைப்  பாட,  என்னைக்
காதலித்துப்  பரிசில்  தருகுவையாயின், தலைவனே! நீ அருளாமையாற்
கண்டார்  இரங்க  மெலிந்து அரிய துயரத்தான் வருந்தும் உன்னுடைய
திருந்திய  அணியையுடைய அரிவையது தழைத்த மயிலினது பீலியைக்
காலொன்றக்  குவித்தாற்போன்ற  தழைத்த  மெல்லிய கூந்தற்கண்ணே
மணங்கமழும்  புகையைக்  கொள்ளுவித்துக்  குளிர்ந்த  மணங்கமழும்
மாலையைச்  சூட  வளவிய  செலவையுடைய  உயர்ந்த  தேரை  நின்
குதிரைகள் பூண்பனவாக-எ - று.

அன்னவாகவென்றது,  இரவலர்க்கு  அருங்கலவெறுக்கைகளை எளிதிற்
கொடுப்பையன்றே! அவ்வெறுக்கை எமக்கும் எளிதாகவென்றவாறாம்.

(147) கன்முழை யருவிப் பன்மலை நீந்திச்
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக்

கார்வா னின்னுறை தமியள் கேளா

நெருந லொருசிறைப் புலம்புகொண் டுறையும்

அரிமதர் மழைக்க ணம்மா வரிவை
நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல்

மண்ணுறு மணியின் மாசற