புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   436
Zoom In NormalZoom Out


காக்கும்,    அழகிய     பெரிய     பக்கமலையினையும்   பளிங்கை
வகுத்தாற்போன்ற   வெளிய  நிறத்தையுடைய  இனிய  நீரையுமுடைய
பெரிய மலைநாட்டையுடைய நள்ளி அவனென-எ - று.

நீங்கி : நீங்க.

பலவுமுதற்பொருந்தித்       தொழுதனனெனவும்,      மலைகாக்கும்
நள்ளியெனவும் இயையும்.

அவன் நள்ளியெனப் பிறர்பிறர் கூற வழிக்கேட்டிசினெனக் கூட்டுக.

(151) பண்டும் பண்டும் பாடுந ருவப்ப
விண்டோய் சிமைய விறல்வரைக் கவாஅற்

கிழவன் சேட்புலம் படரி னிழையணிந்து

புன்றலை மடப்பிடி பரிசி லாகப்

பெண்டிருந் தம்பதங் கொடுக்கும் வண்புகழ்க்

கண்டீ ரக்கோ னாகலி னன்றும்

முயங்க லான்றிசின் யானே பொலந்தேர்
நன்னன் மருக னன்றியு நீயும்
முயங்கற் கொத்தனை மன்னே வயங்குமொழிப்

பாடுநர்க் கடைத்த கதவி னாடுமழை

அணங்குசா லடுக்கம் பொழியுநும்

மணங்கமழ் மால்வரை வரைந்தன ரெமரே.

திணையும் துறையும் அவை. (பாடாண்டிணை, இயன்மொழி)

இளங்கண்டீரக்கோவும்   இளவிச்சிக்கோ   வும்     ஒருங்கிருந்தவழிச்
சென்ற   பெருந்தலைச்சாத்தனார்   இளங்கண்டீரக்  கோவைப்  புல்லி
இளவிச்சிக்கோவைப் புல்லாராக, என்னை என்செயப் புல்லீராயினீரென
அவர் பாடியது.

(இ-ள்.)   முன்பேயும்   முன்பேயும்  பாடுவார்  விரும்ப  விசும்பைப்
பொருந்திய  உச்சியையுடைய  சிறந்த  மலைப்பக்கத்துத் தம் கணவன்
நெடுந்தூரத்தே  செல்லின்  ஆபரணத்தை  யணிந்து புல்லிய தலையை
யுடைய மெல்லிய பிடியைப் பரிசிலாகக்கொண்டு அவர்பெண்டிரும் தம்
தரத்திலே     பரிசில்     கொடுக்கும்     வள்ளிய   புகழையுடைய
கண்டீரக்கோனாதலாலே  பெரிதும் தழுவிக்கொள்ளுதலை அமைந்தேன்
யான்;    பொன்னாற்    செய்யப்பட்ட   தேரினையுடைய   நன்னன்
மரபினுள்ளானாதலன்றியும் நீயும் தழுவுதற்குப் பொருந்தினாயாயினும்