புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   437
Zoom In NormalZoom Out

வாயையுடைய  புலியை  இறந்துபாட்டையுறுவித்துத் துளை பொருந்திய
கோட்டையுடைத்தாகிய   தலையினையுடைய   புள்ளிமான்  கலையை
உருட்டி   உரல்போலும்   தலையையுடைய   கேழலாகிய   பன்றியை
வீழச்செய்து   அதற்கு   அயலதாகிய  ஆழ்தலையுடைய  புற்றின்கட்
கிடக்கின்ற   உடும்பின்கட்  சென்று  செறியும்  வல்வில்லாலுண்டாகிய
வேட்டத்தை        வென்றிப்படுத்தியிருந்தவன்,        புகழமைந்த
சிறப்பினையுடைய  அம்பு  ஏத்தொழிலிலே  மிகச்  சென்று உறுதற்குக்
காரணமாகிய கொலைவன் யாரோதான்? கொலைவன் மற்றிவன், விலை
ஏதுவாகக்       கொன்றானாக 
     மாட்டான்;      செல்வத்தை
மிகவுடையனாயிருந்தான்;  சந்தனம்  பூசிப்புலர்த்திய  அழகிய  பரந்த
மார்பினையுடைய,         சாரற்கண்ணே        அருவியையுடைய
பயன்படுமலைக்குத்    தலைவனாகிய    ஓரியோ   அல்லனோதான்?
அவனாகத்தகும்;  யான்  பாடுவேன்,  விறலி! ஒருவண்ணம்; நீங்களும்
முழாவின்  கண்ணே  மார்ச்சனையை  யிடுமின்;  யாழிலே  பண்ணை
நிறுத்துமின்;  கண்  திறக்கப்பட்ட  தூம்பாகிய களிற்றினது கைபோலும்
வடிவையுடைய    பெருவங்கியத்தை    இசையுங்கோள்;    சல்லியை
வாசியுமின்;  சிறு  பறையை அறையுங்கோள்; பதலையில் ஒருமுகத்தை
மெல்லெனக்   கொட்டுமின்;   நமது  பிறப்புணர்த்தும் கரியகோலைக்
கையின்கண்ணே     தாருங்கோளென்று     சொல்லி     அணுகித்
தலைவனாதலாலே  இருபத்தொரு  பாடற்றுறையையும் முறையாற் பாடி
முடித்துப்   பின்னர்க்   கோவேயென்று  அவன்பெயர் கூறியகாலத்து
அவ்விடத்து   அவ்வார்த்தை  தன்  பெயராதலால்  நாணி,  பின்னை
யாங்கள்   ‘நாட்டிடந்தோறும்   நாட்டிடந்தோறும்   சென்றுவருவேம்;
இவ்விடத்து  ஒரு  வேட்டுவரில்லை,  நின்னை  ஒப்போர்’  என யாம்
விரும்பியது கூறவும் அதற்குக் காலந்தரானாய் வேட்டையின்கண் தான்
எய்த  மானினது  நிணத்தையுடைய தசையினது புழுக்குடனே ஆவின்
நெய்யை    உருக்கினாற்போன்ற    மதுவைத்   தந்து   தன்னுடைய
மலையின்கட்    பிறந்த   வலியில்லாத   நல்ல   பொன்னைப்  பல
மணித்திரளுடனே    கலந்து   இதனைக்   கொண்மினெனச்சொல்லிச்
சுரத்திடத்தே    எமக்குத்    தந்தான்;    முழையை   யுடைத்தாகிய
உச்சியையுடைய உயர்ந்த பெரிய கொல்லிக்குத் தலைவன், பாதுகாவாத
வண்மையினையுடைய வென்றியை விரும்புவோன்-எ - று.

 

புழலென்றது ஆகுபெயராற் புழலையுடைய கோட்டை.

 

களிற்றுயிரென்றது    ஆகுபெயராற்     களிற்றினது     கைபோலும்
வடிவையுடைய பெருவங்கி