புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   439
Zoom In NormalZoom Out

மண்ணிப்
புதுமலர் கஞல வின்று பெயரின்

அதுமனெம் பரிசி லாவியர் கோவே.

திணையும் துறையும் அவை. (பெருந்திணை, குறுங்கலி)

அவள் காரணமாக அவனைப் பெருங்குன்றூர்கிழார் பாடியது.

(இ-ள்.)   கன்முழைக்கணின்றும்     விழும்   அருவியையுடைய பல
மலைகளை         அரிதிற்கழித்துச்        சிறிய        யாழைச்
செவ்வழியென்னும்பண்ணை       வாசிக்கும்படியாகப்       பண்ணி
வாசித்துவந்ததற்குக்  கார்காலத்து  மழையினது  இனியதுளி  வீழ்கின்ற
ஓசையைத்  தமியளாகக்  கேட்டு  நெருநற்று  ஒரு பக்கத்துத் தனிமை
கொண்டிருந்த அரிபரந்த மதர்த்த குளிர்ச்சியையுடைய  கண்ணினையும்
அழகிய   மாமைநிறத்தினையுமுடைய  அந்த  அரிவையது  நெய்யால்
துறக்கப்பட்ட மைபோலும்

கரிய    மயிரை   ஒப்பமிடப்பட்ட  நீலமணியினும்  மாசறக்  கழுவிச்
செவ்விமலர்  நெருங்கும்  பரிசு  இன்று  வருவையாயின்,  அதுவாகும்
எம்முடைய பரிசில்; ஆவியருடைய வேந்தே!-எ - று.

உறை  -  துளி;  என்பது  ஆகுபெயரால்  துளியினோசையை.  மன்:
அசை.

சீறியாழ்   செவ்வழிபண்ணி   வந்ததற்கு   அரிவைகூந்தல்   புதுமலர்
கஞலும்படி  அவள்பால்  எம்மொடும்  வரின் எம் பரிசில் அதுவெனக்
கூட்டுக.

நெய்பூசுதலோடு பேணுதலைத்துறந்தவெனினும் அமையும்.

செவ்வழிபண்ணிவந்தது,   புதுமலர்கஞலவென்று  இயைத்துரைப்பாரும்
உளர்.

(148) கறங்குமிசை யருவிப் பிறங்குமலை நள்ளிநின்
அசைவி னோன்றா ணசைவள னேத்தி

நாடொறு நன்கலங் களிற்றொடு கொணர்ந்து

கூடுவிளங்கு வியனகர்ப் பரிசின்முற் றளிப்பப்

பீடின் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச்

செய்யா கூறிக் கிளத்தல்

எய்யா தாகின்றெஞ் சிறுசெந் நாவே.

திணை - பாடாண்டிணை; துறை - பரிசிற்றுறை.

கண்டீரக்கோப்  பெருநள்ளியை   (பி   -  ம்.  கண்டிற்கோப்பெருநற்
கிள்ளியை) வன்பரணர் பாடியது.

(இ-ள்.)   உச்சிக்கணின்றும்   ஆலித்து  (ஒலித்து) இழிதரும்  அருவி
யினையுடைய     உயர்ந்த     மலையையுடைய    நள்ளி!    நினது
தளர்ச்சியில்லாத   வலிய   முயற்சியானாய  நச்சப்படும்  செல்வத்தை
வாழ்த்தி நாடோறும் நல்ல அணிகலத்தைக் களிற்றோடே கொண்டுவந்து
நெற்