திருக்குறள்
ஓலை எண் :   5

Zoom In NormalZoom Out

ழை  விரும்பினாரிடத்து.  இன்ன   தன்மைத்து   என   ஒருவராலும்
கூறப்படாமையின்  அவிச்சையை  ''இருள்''  என்றும்,   நல்வினையும்
பிறத்தற்கு  ஏதுவாகலான்  ''இருவினையும்  சேரா'' என்றும் கூறினார்.
இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார்
கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய
இறைவன்  புகழே  பொருள்  சேர்  புகழ்  எனப்பட்டது.  புரிதல்  -
எப்பொழுதும்   சொல்லுதல் பொறிவாயில்   ஐந்தவித்தான்  பொய்தீர்
ஒழுக்க  நெறிநின்றார் நீடுவாழ் வார். மெய், வாய், கண், மூக்கு, செவி
என்னும்   பொறிகளை   வழியாக   உடைய  ஐந்து  அவாவினையும்
அறுத்தானது;  பொய்  தீர்  ஒழுக்க மெய்யான ஒழுக்க நெறியின்கண்
நின்றார்,  பிறப்பு  இன்றி  எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்.
புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து
ஆயிற்று.   ஒழுக்க  நெறி  ஐந்தவித்தானால்  சொல்லப்பட்டமையின்,
ஆண்டை   ஆறனுருபு  செய்யுட்  கிழமைக்கண்  வந்தது.  ''கபிலரது
பாட்டு''  என்பது  போல.  இவை  நான்கு  பாட்டானும்  இறைவனை
நினைத்தலும்,  வாழ்த்தலும்,  அவன்  நெறி  நிற்றலும் செய்தார் வீடு
பெறுவர்    என்பது    கூறப்பட்டது    தனக்குவமை   இல்லாதான்
தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. ஒருவாற்றானும்
தனக்கு   நிகர்   இல்லாதவனது   தாளைச்  சேர்ந்தார்க்கு  அல்லது;
மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது. "உறற்பால
தீண்டா  விடுதலரிது"  நாலடி.109  என்றாற்  போல, ஈண்டு ''அருமை''
இன்மைமேல்  நின்றது.  தாள்  சேராதார்  பிறவிக்கு ஏது ஆகிய காம
வெகுளி   மயக்கங்களை   மாற்றமாட்டாமையின்,   பிறந்து   இறந்து
அவற்றான்  வரும்  துன்பங்களுள்  அழுந்துவர்  என்பதாம்.அறவாழி
அந்தணன்   தாள்சேர்ந்தார்க்   கல்லால்  பிறவாழி  நீந்தல்  அரிது.
அறக்கடல் ஆகிய அந்தணனது