திருக்குறள்
ஓலை எண் :   8

Zoom In NormalZoom Out

வாறு   உயிர்களது    பசியையும்   நீர்வேட்கையையும்   நீக்குதலின்
அவை    வழங்கி   வருதலுடையவாயின   என்பதாம்.   விண்இன்று
பொய்ப்பின்  விரிநீர்  வியனுலகத்து  உள்நின்  றுடற்றும்  பசி. மழை
வேண்டுங்காலத்துப்   பெய்யாது   பொய்க்கும்   ஆயின்;   கடலால்
சூழப்பட்ட   அகன்ற   உலகத்தின்கண்;  நிலை  பெற்று  உயிர்களை
வருத்தும்   பசி.   கடலுடைத்தாயினும்   அதனால்  பயன்  இல்லை
யென்பார்,  ''விரி நீர் வியன் உலகத்து'' என்றார். உணவு  இன்மையின்
பசியான்  உயிர்கள்  இறக்கும்  என்பதாம்.  ஏரின்  உழாஅர் உழவர்
புயலென்னும்  வாரி  வளங்குன்றிக்  கால். உழவர் ஏரான் உழுதலைச்
செய்யார்;   மழை   என்னும்   வருவாய்   தன்   பயன்  குன்றின்.
''குன்றியக்கால்''  என்பது  குறைந்து  நின்றது.  உணவு  இன்மைக்குக்
காரணம்   கூறியவாறு.   கெடுப்பதூஉம்  கெட்டார்க்குச்  சார்வாய்மற்
றாங்கே  எடுப்பதூஉம்  எல்லாம்  மழை.  பூமியின்கண் வாழ்வாரைப்
பெய்யாது    நின்று    கெடுப்பதூஉம்;   அவ்வாறு   கெட்டார்க்குத்
துணையாய்ப் பெய்து முன் கெடுத்தாற் போல இவை எல்லாம் வல்லது
மழை.   ''மற்று''   வினை   மாற்றின்கண்   வந்தது,  ஆங்குஎன்பது
மறுதலைத்   தொழிலுவமத்தின்கண்   வந்த   உவமச்சொல்.  கேடும்
ஆக்கமும்   எய்துதற்கு  உரியார்  மக்கள்  ஆதலின்,  ''கெட்டார்க்கு
என்றார்''.  ''எல்லாம்''  என்றது, அம்மக்கள் முயற்சி  வேறுபாடுகளால்
கெடுத்தல்  எடுத்தல்கள்  தாம்  பலவாதல் நோக்கி. ''வல்லது'' என்பது
அவாய்   நிலையான்   வந்தது.   மழையினது  ஆற்றல்  கூறியவாறு.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது.
மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது; வீழாதாயின் அப்பொழுதே
பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது.