திருக்குறள்
ஓலை எண் :   9

Zoom In NormalZoom Out

''விசும்பு''   ஆகு பெயர்.  ''மற்று''  வினைமாற்றின்கண் வந்தது. இழிவு
சிறப்பு  உம்மை  விகாரத்தால்தொக்கது.  ஓர் அறிவு உயிரும் இல்லை
என்பதாம்.  நடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா
தாகி  விடின்.  அளவில்லாத  கடலும்  தன் இயல்பு குறையும்; மேகம்
தான் அதனைக் குறைத்து அதன்கண் பெய்யாது விடுமாயின்.  உம்மை
சிறப்பு  உம்மை.  தன்  இயல்பு  குறைதலாவது  நீர்  வாழ் உயிர்கள்
பிறவாமையும்,   மணி   முதலாயின   படாமையும்   ஆம்.  ஈண்டுக்
குறைத்தல்  என்றது  முகத்தலை.  அது  "கடல்குறை  படுத்தநீர்  கல்
குறைபட வெறிந்து" பரி.பா.20 என்பதனாலும் அறிக. மழைக்கு முதலாய
கடற்கும் மழை வேண்டும் என்பதாம். இவை ஏழு பாட்டானும் உலகம்
நடத்தற்கு  ஏதுவாதல்  கூறப்பட்டது.  சிறப்பொடு  பூசனை செல்லாது
வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. தேவர்கட்கும் இவ்வுலகில்
மக்களால்   செய்யப்படும்   விழவும்   பூசையும்   நடவாது;   மழை
பெய்யாதாயின்  நைமித்திகத்தோடு கூடிய நித்தியம் என்றார் ஆகலின்
''செல்லாது''  என்றார். ''உம்மை'' சிறப்பு உம்மை. நித்தியத்தில்  தாழ்வு
தீரச்  செய்வது நைமித்திகம் ஆதலின், அதனை முற்கூறினார். தானம்
தவமிரண்டும்  தங்கா  வியனுலகம் வானம் வழங்கா தெனின். அகன்ற
உலகின்கண்  தானமும்  தவமும்  ஆகிய இரண்டு அறமும் உளவாகா;
மழை   பெய்யாது   ஆயின்.   தானமாவது   அறநெறியான்   வந்த
பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்; தவம் ஆவது
மனம்  பொறிவழி  போகாது  நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி
சுருக்கல்  முதலாயின.  பெரும்பான்மை  பற்றித் தானம் இல்லறத்தின்
மேலும்,   தவம்   துறவறத்தின்  மேலும்  நின்றன.  நீரின்  றமையா
துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு. எவ்வ