கையான் மேம்பாட்டார்க்கும்
நீரை இன்றி உலகியல் அமையாது ஆயின்; அந்நீர் இடையறாது ஒழுகும்
ஒழுக்கும் வானை இன்றி அமையாது. பொருள்
இன்பங்களை ''உலகியல்'' என்றார்,
அவை இம்மைக்கண்ண ஆகலின்,
இடையறாது ஒழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும்
உளதாகல், நீர் இன்று அமையாது
உலகு என்பது எல்லாரானும் தெளியப்படுதலின்,
அது போல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படும் என்பார், ''நீர் இன்று அமையாது உலகம் எனின்'' என்றார்.
இதனை, ''நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது''
என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு
ஏதுவாதல் கூறப்பட்டது. அஃதாவது, முற்றத் துறந்த முனிவரது பெருமை கூறுதல். அவ் அறமுதற்பொருள்களை உலகிற்கு உள்ளவாறு உணர்த்துவார் அவர் ஆகலின்,
இது வான் சிறப்பின்பின் வைக்கப்பட்டது. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை; விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு. தமக்கு உரிய ஒழுக்கத்தின் கண்ணே
நின்று துறத்தலாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை
வழுவாது ஒழுக அறம் வளரும்; அறம் வளரப் பாவம் தேயும்; பாவம் தேய அறியாமை நீங்கும்;
அறியாமை நீங்க நித்த அநித்தங்களது வேறுபாட்டு உணர்வும் அழிதன் மாலையவாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும், பிறவித் துன்பங்களும் தோன்றும்;
அவை தோன்ற வீட்டின் கண் ஆசை உண்டாம்; அஃது உண்டாகப் பிறவிக்குக் காரணம் ஆகிய |