''பயன்இல்'' முயற்சிகள்
எல்லாம் நீங்கி வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி
உண்டாம்; அஃது உண்டாக,மெய்யுணர்வு
பிறந்து புறப்பற்று ஆகிய ''எனது''
என்பதும், அகப்பற்று ஆகிய ''யான்'' என்பதும் விடும். ஆகலான் இவ்விரண்டு பற்றையும் இம் முறையே உவர்த்து விடுதல் எனக் கொள்க. ''பனுவல்'' எனப் பொதுபடக் கூறிய அதனான் ஒன்றையொன்று ஒவ்வாத சமய நூல்கள் எல்லாவற்றிற்கும் இஃது ஒத்த துணிவு என்பது பெற்றாம். செய்தாரது
துணிவு பனுவல்மேல் ஏற்றப்பட்டது. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை
எண்ணிக்கொண்டற்று. இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால்
கூறி அறியலுறின் அளவுபடாமையான்; இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி, இத்துணையர் என அறியலுற்றாற் போலும். முடியாது என்பதாம், ''கொண்டால்'' என்னும் வினை எச்சம் ''கொண்டு''
எனத் திரிந்து நின்றது. இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு. பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; அப்பிறப்பு
அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே;
உலகின்கண் உயர்ந்தது. தெரிமாண் தமிழ் மும்மைத்
தென்னம்பொருப்பன் பரிபாடல் என்புழிப் போல, ''இருமை'' என்றது ஈண்டு
எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால்
தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே |