திருக்குறள்
ஓலை எண் :   14

Zoom In NormalZoom Out

பெருமைக்கு  ஏது  ஐந்து  அவித்தலும், யோகப்   பயிற்சியும், தத்துவ
உணர்வும்   என்பது  கூறப்பட்டது.  நிறைமொழி  மாந்தர்  பெருமை
நிலத்து  மறைமொழி  காட்டி  விடும்.  நிறைந்த மொழியினை உடைய
துறந்தாரது  பெருமையை;  நிலவுலகத்தின்கண்  அவர்  ஆணையாகச்
சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும். ''நிறைமொழி'' என்பது,
அருளிக்   கூறினும்,   வெகுண்டு  கூறினும்,  அவ்வப்  பயன்களைப்
பயந்தே   விடும்   மொழி.   காட்டுதல்!   பயனான்   உணர்த்துதல்.
குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது.
துறவு,  மெய்யுணர்வு,  அவாவின்மை  முதலிய  நற்குணங்கள் ஆகிய
குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி; தான் உள்ள அளவு
கணமே    ஆயினும்,    வெகுளப்பட்டாரால்    தடுத்தல்    அரிது.
சலியாமையும்,  பெருமையும் பற்றிக் குணங்களைக் குன்றாக உருவகம்
செய்தார்.  குணம்  சாதியொருமை.  அநாதியாய் வருகின்றவாறு பற்றி
ஒரோ   வழி  வெகுளி  தோன்றியபொழுதே அதனை  மெய்யுணர்வு
அழிக்கும்   ஆகலின், கணம் ஏயும்  என்றும்,  நிறைமொழி  மாந்தர்
ஆகலின்,   ''காத்தல்  அரிது''  என்றும்  கூறினார்.  இவை  இரண்டு
பாட்டானும்   அவர்  ஆணை  கூறப்பட்டது.  அந்தணர்  என்போர்
அறவோர்மற்   றெவ்வுயிர்க்கும்  செந்தண்மை  பூண்டொழுக  லான்.
எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்;
அந்தணரென்று  சொல்லப்படுவார்  துறவறத்தில்  நின்றவர்.  பூணுதல்
விரதமாகக்  கோடல்.  ''அந்தணர்''  என்பது  அழகிய  தட்பத்தினை
உடையார் என