திருக்குறள்
ஓலை எண் :   15

Zoom In NormalZoom Out

ஏதுப்பெயர்   ஆகலின்,   அஃது   அவ்வருளுடையார்  மேலன்றிச்
செல்லாது   என்பது   கருத்து.  அவ்வாறு  ஆணையுடையாராயினும்
உயிர்கண்மாட்டு   அருளுடையர்   என்பது  இதனால்  கூறப்பட்டது.
அஃதாவது, அம்முனிவரான் உணர்த்தப்பட்ட அம்மூன்றனுள் ஏனைப்
பொருளும்   இன்பமும்  போலாது,  அறன்  இம்மை  மறுமை  வீடு
என்னும் மூன்றனையும் பயத்தலான், அவற்றின் வலியுடைத்து என்பது
கூறுதல்.  அதிகார  முறைமையும்  இதனானே விளங்கும். ''சிறப்புடை
மரபின்   பொருளும்   இன்பமும்  அறத்துவழிப்  படூஉம்  தோற்றம்
போல''புறநா.31   என்றார்  பிறரும்.  சிறப்பீனும்  செல்வமும்  ஈனும்
அறத்தின்ஊங்கு  ஆக்கம் எவனோ உயிர்க்கு. வீடுபேற்றையும் தரும்;
துறக்கம்   முதலிய  செல்வத்தையும்  தரும்;  ஆதலான்  உயிர்கட்கு
அறத்தின்  மிக்க ஆக்கம் யாது? எல்லாப் பேற்றினும் சிறந்தமையின்,
வீடு  ''சிறப்பு'' எனப்பட்டது. ஆக்கம் தருவதனை  ''ஆக்கம்'' என்றார்.
ஆக்கம்:  மேன்  மேல்  உயர்தல்,  ஈண்டு  ''உயிர்''  என்றது மக்கள்
உயிரை,  சிறப்பும்  செல்வமும் எய்துதற்கு உரியது அதுவே ஆகலின்.
இதனால்  அறத்தின்  மிக்க  உறுதி  இல்லை  என்பது  கூறப்பட்டது.
அறத்தினூஉங்  காக்கமும்  இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை
கேடு.  ஒருவனுக்கு  அறஞ்செய்தலின்  மேற்பட்ட ஆக்கமும் இல்லை;
அதனை   மயக்கத்தான்   மறத்தலின்  மேற்பட்ட  கேடும்  இல்லை.
''அறத்தின்  ஊங்கு ஆக்கமும் இல்லை''. என மேற்சொல்லியதனையே
அநுவதித்தார்,  அதனால்  கேடு  வருதல்  கூறுதற்  பயன்  நோக்கி.
இதனான்  அது  செய்யாவழிக்  கேடு  வருதல் கூறப்பட்டது. ஒல்லும்
வகையான்   அறவினை  ஓவாதே  செல்லும்வா  யெல்லாஞ்  செயல்.
தத்தமக்கு  இயலுந்திறத்தான்.  அறம் ஆகிய நல்வினையை ஒழியாதே
அஃது  எய்தும்  இடத்தான்  எல்லாம் செய்க. இயலுந்திறம் ஆவது -
இல்லறம்