பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம்
யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல், ஓவாமை, இடைவிடாமை, எய்தும் இடம் ஆவன மனம் வாக்குக் காயம் என்பன. அவற்றால் செய்யும் அறங்கள் ஆவன முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலும் என இவை. இதனான் அறஞ்செய்யும் ஆறு கூறப்பட்டது. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. அவ்வாற்றான் அறஞ் செய்வான் தன் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆக; அவ்வளவே அறம் ஆவது; அஃது ஒழிந்த சொல்லும் வேடமும் அறம் எனப்படா, ஆரவார நீர்மைய; குற்றம் - தீயன சிந்தித்தல். பிறர் அறிதல் வேண்டிச் செய்கின்றன ஆகலின், ''ஆகுல நீர'' என்றார். மனத்து மாசுடையான்
ஆயவழி அதன்வழிய ஆகிய
மொழி மெய்களால் செய்வன பயனில என்பதூஉம்
பெறப்பட்டது. அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல்
நான்கும் இழுக்கா இயன்ற தறம். பிறர் ஆக்கம்
பொறாமையும்; புலன்கள்மேல் செல்கின்ற அவாவும்; அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்; அதுபற்றி வரும் கடுஞ்சொல்லும் ஆகிய; இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறம் ஆவது. இதனான், இவற்றோடு விரவி இயன்றது அறம் எனப்படாது என்பதூஉம் கொள்க.
இவை இரண்டு பாட்டானும் அறத்தினது இயல்பு
கூறப்பட்டது. அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. ''யாம் இது
பொழுது இளையம் ஆகலின் இறக்கும்
ஞான்று செய்தும்'' எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க; அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம். ''மற்று'' என்பது அசைநிலை. ''பொன்றாத்
துணை'' என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இத |