திருக்குறள்
ஓலை எண் :   17

Zoom In NormalZoom Out

னான்  இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத  யாக்கை நிலையின
பொழுதே செய்க என்பது கூறப்பட்டது. அறத்தா றிதுவென வேண்டா
சிவிகை  பொறுத்தானோ  டூர்ந்தான்  இடை.  அறத்தின் பயன் இது
என்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா; சிவிகையைக்
காவுவானோடு    செலுத்துவானிடைக்    காட்சியளவை  தன்னானே
உணரப்படும்.  பயனை  ''ஆறு''  என்றார், பின்னது ஆகலின். ''என''
என்னும்    எச்சத்தால்    சொல்   ஆகிய   ஆகம   அளவையும்,
''பொறுத்தானோடு   ஊர்ந்தானிடை''  என்றதனால்  காட்சியளவையும்
பெற்றாம்.  உணரப்படும்  என்பது  சொல்லெச்சம்.  இதனான்  அறம்
பொன்றாத்     துணையாதல்     தெளிவிக்கப்பட்டது.   தன்னானே
உணரப்படும்.  பயனை  ''ஆறு''  என்றார்,  பின்னது ஆகலின் ''என''
என்னும்    எச்சத்தால்    சொல்   ஆகிய   ஆகம   அளவையும்,
''பொறுத்தாணோடு  ஊர்ந்தானிடை''  என்றதனால்  காட்சியளவையும்
பெற்றாம்,  உணரப்படும்  என்பது  சொல்லெச்சம்.  இதனான்  அறம்
பொன்றாத்  துணையாதல்  தெளிவிக்கப்பட்டது.  வீழ்நாள் படாஅமை
நன்றாற்றின்  அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். செய்யாது
கழியும்   நாள்  உளவாகாமல்  ஒருவன்  அறத்தைச்  செய்யுமாயின்;
அச்செயல்   அவன்  யாக்கையோடு  கூடும்  நாள்  வரும்  வழியை
வாராமல் அடைக்குங் கல்லாம். ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை
வினையும்  உள்ள  துணையும்,  உயிர்  யாக்கையோடும் கூடி நின்று,
அவ்வினைகளது இருவகைப் பயனையும் நுகரும் ஆகலான்,  அந்நாள்
முழுவதும்   வாழ்நாள்  எனப்பட்டது.   குற்றங்கள்   ஐந்து  ஆவன:
அவிச்சை,  அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன. இவற்றை
வடநூலார்  ''பஞ்சக்கிலேசம்''   என்பர்.   வினை  இரண்டு  ஆவன:
நல்வினை தீவினை என்பன. பயன் இரண்டு ஆவன: இன்பம் துன்பம்
என்பன.   இதனால்  அறம்  வீடு  பயக்கும்  என்பது  கூறப்பட்டது.
அறத்தான்   வருவதே   இன்பமற்றெல்லாம்   புறத்த  புகழும்  இல.
இல்லறத்தோடு  பொருந்தி  வருவதே  இன்பம்  ஆவது;  அதனோடு
பொருந்தாது  வருவன  எல்லாம் இன்பம் ஆயினும் துன்பத்தினிடத்த;
புகழும் இல - அதுவேயும் அன்றிப் புகழும் உடைய அல்ல.