திருக்குறள்
ஓலை எண் :   18

Zoom In NormalZoom Out

''ஆன்''  உருபு ஈண்டு  உடனிகழ்ச்சிக்கண்  வந்தது, ''தூங்கு கையான்
ஓங்கு  நடைய''  புறநா.22  என்புழிப்போல. இன்பம் - காம நுகர்ச்சி;
அஃது  ஆமாறு காமத்துப்பாலின் முதற்கண் சொல்லுதும். இன்பத்தின்
புறம்   எனவே   துன்பம்  ஆயிற்று.  பாவத்தான்  வரும்  ''பிறனில்
விழைவு''   முதலாயின   அக்கணத்துள்   இன்பமாய்த்   தோன்றும்
ஆயினும்,   பின்   துன்பமாய்   விளைதலின்    ''புறத்த''  என்றார்.
அறத்தோடு   வாராதன  ''புகழும்  இல''  எனவே,  வருவது  புகழும்
உடைத்து  என்பது  பெற்றாம்.  இதனான்  அறம் செய்வாரே இம்மை
இன்பமும்   புகழும்   எய்துவர்  என்பது  கூறப்பட்டது.  செயற்பால
தோரும்  அறனே  ஒருவற்கு  உயற்பால  தோரும் பழி. ஒருவனுக்குச்
செய்தற்    பான்மையானது     நல்வினையே;    ஒழிதற்பான்மையது
தீவினையே.  ''ஓரும்''  என்பன இரண்டும்  அசைநிலை. தேற்றேகாரம்
பின்னும்   கூட்டப்பட்டது.    பழிக்கப்படுவதனைப்  ''பழி''  என்றார்.
இதனான்   செய்வதும்   ஒழிவதும்   நியமிக்கப்பட்டன.  அஃதாவது,
இல்லாளோடு  கூடி  வாழ்தலினது சிறப்பு. இந்நிலை அறம் செய்தற்கு
உரிய   இருவகை   நிலையுள்   முதலது  ஆதலின்,  இஃது  அறன்
வலியுறுத்தலின்   பின்   வைக்கப்பட்டது   இல்வாழ்வான்  என்பான்
இயல்புடைய  மூவர்க்கும் நல்லாற்றின்  நின்ற துணை. இல்லறத்தோடு
கூடி  வாழ்வான்  என்று  சொல்லப்படுவான்; அற இயல்பினையுடைய
ஏனை   மூவர்க்கும்   நல்   ஆற்றின்   நின்ற   துணை   -  அற
இயல்பினையுடைய  ஏனை  மூவர்க்கும் அவர் செல்லும் நல்லொழுக்க
நெறிக்கண்  நிலை  பெற்ற  துணை  ஆம்.  இல் என்பது ஆகுபெயர்.
என்பான்    எனச்   செயப்படு   பொருள்   வினைமுதல்   போலக்
கூறப்பட்டது. ஏனை மூவர் ஆவார், ஆசாரியனிடத்தினின்று ஓதுதலும்
விரதங்காத்தலும்  ஆகிய  பிரமசரிய  ஒழுக்கத்தானும், இல்லை விட்டு
வனத்தின்கண் தீயொடு சென்று மனையாள்  வழிபடத் தவஞ் செய்யும்
ஒழுக்கத்