தானும் முற்றத் துறந்த
யோக ஒழுக்கத்தானும் என இவர்; இவருள் முன்னை இருவரையும் பிறர் மதம் மேற்கொண்டு கூறினார். இவர் இவ்வொழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும், அச்செலவிற்குப் பசி நோய், குளிர்
முதலியவற்றான் இடையூறுவாராமல்,
உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி, அவ்வந்நெறிகளின் வழுவாமல் செலுத்துதலான் ''நல் ஆற்றின் நின்ற துணை'' என்றார். துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. களைகண் ஆனவரால் துறக்கப்பட்டார்க்கும்; நல்கூர்ந்தார்க்கும்; ஒருவருமன்றித் தன்பால்வந்து இறந்தார்க்கும்; இல்வாழ்வானென்று சொல்லப்படுவான் துணை துறந்தார்க்குப் பாவம் ஒழிய அவர் களைகணாய் நின்று வேண்டுவன செய்தலானும், துவ்வாதவர்க்கு உணவு முதலிய கொடுத்தலானும், இறந்தார்க்கு நீர்க்கடன் முதலிய செய்து நல்லுலகின்கண் செலுத்தலானும், துணை என்றார். இவை இரண்டு பாட்டானும் இல்நிலை
எல்லா உபகாரத்திற்கும் உரித்தாதல் கூறப்பட்டது. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தா றோம்பல் தலை. பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐந்து இடத்தும்
செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச்
சிறப்புடைய அறம்ஆம். பிதிரராவார் படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை
ஆதலின், ''தென்புலத்தார்'' என்றார். தெய்வம்
என்றது சாதியொருமை. ''விருந்து'' என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்: பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும், அஃது இன்மையின் குறியாமை வந்தாரும் என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லா |