திருக்குறள்
ஓலை எண் :   20

Zoom In NormalZoom Out

அறங்களும்  தான் உளனாய்  நின்று செய்ய வேண்டுதலின் தன்னை
ஓம்பலும்  அறனாயிற்று.  ''என்ற  என்பது விகாரமாயிற்று''. ''ஆங்கு''
அசை.   ஐவகையும்   அறம்  செய்தற்கு  இடனாகலின்  ''ஐம்புலம்''
என்றார்.    அரசனுக்கு    இறைப்பொருள்   ஆறில்   ஒன்றாயிற்று,
இவ்வைம்புலத்திற்கும்   ஐந்து   கூறு   வேண்டுதலான்   என்பதறிக.
பழியஞ்சிப்   பாத்தூண்   உடைத்தாயின்   வாழ்க்கை  வழியெஞ்சல்
எஞ்ஞான்றும்  இல்.  பொருள் செய்யுங்கால் பாவத்தை அஞ்சி ஈட்டி,
அப்பொருளை  இயல்பு  உடைய  மூவர்  முதலாயினார்க்கும்  தென்
புலத்தார்  முதலிய  நால்வர்க்கும் பகுத்துத் தான் உண்டலை ஒருவன்
இல்வாழ்க்கை  உடைத்தாயின்;  அவன்  வழி உலகத்து எஞ்ஞான்றும்
நிற்றல்   அல்லது   இறத்தல்   இல்லை.  பாவத்தான்  வந்த  பிறன்
பொருளைப்  பகுத்து  உண்ணின்,  அறம்  பொருளுடையார் மேலும்,
பாவம்  தன்  மேலுமாய் நின்று வழி எஞ்சும் ஆகலின், ''பழி அஞ்சி''
என்றார்.  வாழ்வானது  உடைமை  வாழ்க்கை  மேல்  ஏற்றப்பட்டது.
அன்பும்  அறனும்  உடைத்தாயின்  இல்வாழ்க்கை  பண்பும் பயனும்
அது.   ஒருவன்  இல்வாழ்க்கை  தன்  துணைவிமேல்  செய்யத்தகும்
அன்பினையும்,  பிறர்க்குப்  பகுத்து உண்டல் ஆகிய அறத்தினையும்
உடைத்தாயின்;  அவ்வுடைமை  அதற்குப்  பண்பும் பயனும் ஆகும்.
நிரல்நிறை.  இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகா வழி இல்லறம்
கடைபோகாமையின்,  அன்புடைமை  பண்பு ஆயிற்று; அறனுடைமை
பயன்  ஆயிற்று.  இவை  மூன்று பாட்டானும் இல்நிலையில் நின்றான்
அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின்
புறத்தாற்றின் போஒய்ப்  பெறுவ தெவன். ஒருவன் இல் வாழ்க்கையை
அறத்தின்  வழியே  செலுத்துவன்  ஆயின்;  அவன் அதற்குப் புறம்
ஆகிய  நெறியில் போய்ப் பெறும் பயன் யாது? ''அறத்தாறு'' என்பது
பழி   அஞ்சிப்   பகுத்து   உண்டலும்,  அன்பு  உடைமையும்  என
மேற்சொல்லிய  ஆறு. ''புறத்தாறு'' இல்லை விட்டு வனத்துச் செல்லும்
நிலை. அந்நிலையின் இது