திருக்குறள்
ஓலை எண் :   23

Zoom In NormalZoom Out

தன  என்பது கூறப்பட்டது.  மனைமாட்சி  இல்லாள்கண்  இல்லாயின்
வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும்  இல்.  மனையறத்திற்குத்  தக்க
நற்குண   நற்செய்கைகள்  ஒருவன்  இல்லாளிடத்து  இல்லையாயின்;
அவ்வில்வாழ்க்கை            செல்வத்தான்           எத்துணை
மாட்சிமையுடைத்தாயினும்   அஃது  உடைத்தன்று.  ''இல்''  என்றார்
பயன்படாமையின்.     இல்லதென்     இல்லவள்     மாண்பானால்;
உள்ளதென இல்லவள்  மாணாக் கடை. ஒருவனுக்கு இல்லாள் நற்குண
நற்செய்கையள்  ஆயினக்கால்  இல்லாதது  யாது?  அவள் அன்னள்
அல்லாக்கால்  உள்ளது  யாது?  ''மாண்பு''  எனக்குணத்தின்  பெயர்
குணிமேல்  நின்றது.  இவை  இரண்டு  பாட்டானும்  இல்வாழ்க்கை்கு
வேண்டுவது  இல்லாளது மாட்சியே, பிற அல்ல என்பது கூறப்பட்டது.
பெண்ணின்  பெருந்தக்க  யாவுள  கற்பென்னும் திண்மைஉண் டாகப்
பெறின்.  ஒருவன்  எய்தும்  பொருள்களுள்  இல்லாளின்  மேம்பட்ட
பொருள்கள்  யாவை  உள;  அவள்  மாட்டுக்கற்பு  என்னும் கலங்கா
நிலைமை  உண்டாகப்  பெறின்.  கற்புடையாள் போல அறம் முதலிய
மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின் ''யாஉள'' என்றார். இதனால்
கற்பு நலத்தது சிறப்புக் கூறப்பட்டது. தெய்வந் தொழாஅள் கொழுநன்
தொழுதெழுவாள் பெய்எனப் பெய்யும் மழை. பிற தெய்வம் தொழாது
தன்   தெய்வம்  ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள்
''பெய்'' என்று   சொல்ல;   மழை  பெய்யும்.  தெய்வம்  தொழுதற்கு
மனம் தெளிவது  துயிலெழும்  காலத்தாகலின், ''தொழுது  எழுவாள்''
என்றார். ''தொழாநின்று''   என்பது,   ''தொழுது''    எனத்   திரிந்து
நின்றது.  தெய்வம்ந்தான்     ஏவல்     செய்யும்      என்பதாகும்.
இதனால்   கற்புடையவளது    ஆற்றல்   கூறப்பட்டது.  தற்காத்துத்
தற்கொண்டான் பேணித்   தகைசான்ற   சொல்காத்துச்  சோர்விலாள்
பெண். கற்பினின்