றும் வழுவாமல்தன்னைக்
காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றால் பேணி; இருவர் மாட்டும் நன்மை அமைந்த புகழ் நீங்காமல் காத்து; சோர்வு இலாள் பெண் - மேற்சொல்லிய நற்குண நற்செய்கைகளினும் கடைப்பிடி உடையவளே பெண் ஆவாள். தன் மாட்டுப் புகழாவது, வாழும் ஊர் கற்பால் தன்னைப் புகழ்வது. சோர்வு-மறவி. இதனால் கற்புடையாளது சிறப்புக் கூறப்பட்டது. சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை. மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல். சிறை:
மதிலும், வாயில்காவலும் முதலாயின. நிறை: நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார், ''நிறைகாக்கும் காப்பே தலை'' என்றார். ஏகாரம் பிரிநிலைக் கண் வந்தது. இதனால் தற்காத்தற் சிறப்புக் கூறப்பட்டது. பெற்றால் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத் தேளிர் வாழும் உலகு. பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால்
பெருஞ்சிறப்பினைப் பெறுவர். வழிபடுதல் என்பது சொல்லெச்சம். இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர்
புத்தேளிரால் பேணப்படுவர் என்பது கூறப்பட்டது.
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்ஏறுபோல் பீடு நடை. புகழை விரும்பிய இல்லாளை இல்லாதார்க்கு; தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் சிங்க ஏறு போல நடக்கும் பெருமித நடை இல்லை. ''புரிந்த'' என்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது. பெருமிதம் உடையானுக்குச் சிங்க ஏறு
நடையான் உவமம் ஆகலின், ''ஏறுபோல்'' என்றார்.
இதனால் தகைசான்ற சொல் காவா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது. மங்கலம் என்ப |