திருக்குறள்
ஓலை எண் :   25

Zoom In NormalZoom Out

மனைமாட்சி  மற்றதன்   நன்கலம்   நன்மக்கட்   பேறு.  ஒருவர்க்கு
நன்மை   என்று   சொல்லுவர்  அறிந்தோர்,  மனையாளது நற்குண
நற்செய்கைகளை;  அவை தமக்கு நல்ல அணிகலம் என்று சொல்லுவர்
நல்ல  புதல்வரைப் பெறுதலை. ''அறிந்தோர்'' என்பது எஞ்சி நின்றது.
''மற்று''  அசை  நிலை.  இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர்
அணிகலம்    கூறி,    வருகின்ற   அதிகாரத்திற்குத்   தோற்றுவாய்
செய்யப்பட்டது.  அஃதாவது,  இருபிறப்பாளர்  மூவரானும்  இயல்பாக
இறுக்கப்படுங் கடன் மூன்றனுள் முனிவர் கடன்கேள்வியானும், தேவர்
கடன்    வேள்வியானும்,    தென்புலத்தார்    கடன்   புதல்வரைப்
பெறுதலானும்     அல்லது     இறுக்கப்படாமையின்,     அக்கடன்
இறுத்தற்பொருட்டு நன்மக்களைப் பெறுதல். அதிகார முறைமை மேலே
பெறப்பட்டது. பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே
றல்ல   பிற   ஒருவன்   பெறும்  பேறுகளுள்;  அறிய வேண்டுவன
அறிதற்குரிய  மக்களைப்  பெறுதல்  அல்லது  பிற பேறுகளை; யாம்
மதிப்பது  இல்லை.  ''அறிவது''  என்பது  அறிதலைச்  செய்வது என
அத்தொழில்  மேல் நின்றது. காரணம் ஆகிய உரிமை காரியம் ஆகிய
அறிதலைப்  பயந்தே விடுமாதலான், ''அத்துணிவு'' பற்றி அறிந்த என
இறந்த காலத்தால் கூறினார். ''அறிவறிந்த'' என்ற  அதனான், ''மக்கள்''
என்னும்   பெயர்  பெண்  ஒழித்து  நின்றது.  இதனான்  புதல்வர்ப்
பேற்றினது   சிறப்புக்  கூறப்பட்டது.  எழுபிறப்பும்  தீயவை  தீண்டா
பழிபிறங்காப்  பண்புடை  மக்கட்  பெறின் வினைவயத்தால் பிறக்கும்
பிறப்பு   ஏழின்கண்ணும்   ஒருவனைத்  துன்பங்கள்  சென்றடையா;
பிறரால் பழி