திருக்குறள்
ஓலை எண் :   74

Zoom In NormalZoom Out

நடையை   விரும்பிச்   செய்யும்பெரிய   அறிவினை   யுடையவனது
செல்வம், ஊரின் வாழ்வார் தண்ணீர் உண்ணும் குளம் நீர் நிறைந்தாற்
போலும்.  நிறைதல்  என்னும்  இடத்து  நிகழ்  பொருளின்  தொழில்
இடத்தின்   மேல்   ஏற்றப்பட்டது.  பாழ்  போகாது  நெடிது  நின்று
எல்லார்க்கும்  வேண்டுவன  தப்பாது  உதவும் என்பதாம். பயன்மரம்
உள்ளூர்ப்  பழுத்தற்றால்  செல்வம்  நயன்உடை  யான்கண்  படின்.
செல்வம்    ஒப்புரவு    செய்வான்   கண்ணே   படுமாயின்,  அது
பயன்படுமரம்    ஊர்    நடுவே   பழுத்தாற்போலும்.   உலக  நீதி
பலவற்றுள்ளும்   ஒப்புரவு   சிறந்தமையின்   அதனையே   ''நயன்''
என்றார்.எல்லார்க்கும்   எளிதில்   பயன்   கொடுக்கும்   என்பதாம்.
மருந்தாகித்  தப்பா  மரத்தற்றால்  செல்வம்  பெருந்தகை  யான்கண்
படின்.   செல்வம்   ஒப்புரவு  செய்யும்  பெரிய  தகைமையுடையான்
கண்ணே  படுமாயின், அஃது எல்லா உறுப்பும் பிணிகட்கு மருந்தாய்த்
தப்பாத  மரத்தை ஒக்கும். தப்புதலாவது, கோடற்கு அரிய இடங்களில்
இன்றாதல்,   மறைந்து   நின்றாதால்,   காலத்தான்  வேறுபட்டாதல்,
பயன்படாமை.  தன்  குறை  நோக்காது எல்லார் வருத்தமும் தீர்க்கும்
என்பதாம். இவை மூன்று பாட்டானும் கடப்பாட்டாளனுடைய பொருள்
பயன்படுமாறு கூறப்பட்டது. இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி   காட்சி   யவர்.  செல்வம்  சுருங்கிய  காலத்தும்  ஒப்புரவு
செய்தற்குத்  தளரார்,  தாம் செய்யத் தகுந்தவற்றை அறிந்த இயற்கை
அறிவுடையார்.  பிற  எல்லாம்  ஒழியினும், இஃது ஒழியார் என்பதாம்.
நயனுடையான்  நல்கூர்ந்தா  னாதல்  செயும்நீர செய்யாது அமைகலா
வாறு.  ஒப்புரவு  செய்தலை  உடையான்  நல்கூர்ந்தான் ஆதலாவது,
தவிராது செய்யும் நீர்மையையுடைய