உவக்கும் என்பது
காரணத்தின்கண் வந்த பெயரெச்சம், அஃது இன்பம்
என்னும் காரியப் பெயர் கொண்டது. அறிந்தாராயின், தாமும் அவ்வின்பத்தை எய்துவது அல்லது வைத்து இழவார் என்பது கருத்து. இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர்
உணல். பொருட்குறை நிரப்பவேண்டி வறியார்க்கு ஈயாது தாமே
தனித்து உண்டல் ஒருவர்க்குப் பிறர்பால் சென்று இரத்தலினும் இன்னாது ஒருதலையாக. பொருட்குறை நிரப்பலாவது: ஒரோ எண்களைக் குறித்து இத்துணை ஈட்டுவதும் என ஈட்டத்தையே மேற்கொண்டு
இவறிக் கூட்டுதல். தனித்தல்: பிறரை ஒழித்தல். இரத்தற்கு
உள்ளது அப்பொழுதை இளிவரவே: பின் நல்குரவு இல்லை, தமியர் உண்டற்கு அவை இரண்டும் உளவாம் ஆகலின், ''இரத்தலின் இன்னாது'' என்றார். ''நிரப்பிய'' என்பதற்குத் ''தேடிய உணவுகளை'' என்று உரைப்பாரும் உளர். சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை. ஒருவற்குச் சாதல் போல இன்னாதது ஒன்று இல்லை, அத்தன்மைத்தாகிய சாதலும், வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாதவழி இனிது. பிறர்க்குப் பயன்படாத உடற்பொறை நீங்குதலான் ''இனிது'' என்றார். இவை மூன்று பாட்டானும் ஈயாமையின் குற்றம் கூறப்பட்டது. அஃதாவது, இல்வாழ்க்கை முதல் ஈகை ஈறாகச் சொல்லப்பட்ட இல்லறத்தின் வழுவாதார்க்கு இம்மைப்பயனாகிய இவ்வுலகின்கண் நிகழ்ந்து இறவாது நிற்கும் கீர்த்தி. இது, பெரும்பான்மையும் ஈதல் பற்றி வருதலின், அதன்பின் வைக்கப்பட்டது.ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை |