றுப்புப் பொருள்களைக்
கொடுத்தமை பற்றி வருதலால் தன்னோடு ஒப்பது இன்றித் தானே உயர்தல். அத்தன்மைத்தாகிய புகழே செய்யப்படுவது என்பதாம். இனி ''ஒன்றா'' என்பதற்கு ஒரு வார்த்தையாகச் சொல்லின் எனவும், ஒரு தலையாகப் பொன்றாது நிற்பது எனவும் உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் புகழ் சிறப்புக் கூறப்பட்டது. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு. ஒருவன்நில எல்லைக் கண்ணே பொன்றாது நிற்கும் புகழைச் செய்யுமாயின் புத்தேள் உலகம் அவனையல்லது தன்னை எய்தி நின்ற ஞானிகளைப் பேணாது. புகழ் உடம்பான் இவ்வுலகும், புத்தேள் உடம்பான் அவ்வுலகும் ஒருங்கே எய்தாமையின், புலவரைப் போற்றாது என்றார். அவன் இரண்டு உலகும் ஒருங்கு எய்துதல், ''புலவர் பாடும் புகழுடையோர்விசும்பின் வலவன் ஏவாவான ஊர்தி எய்துப என்பதம்
செய்வினை முடித்து'' புறநா.27, எனப் பிறராலும் சொல்லப்பட்டது. நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது. புகழுடம்பிற்கு ஆக்கமாகுங் கேடும், புகழுடம்பு உளதாகும் சாக்காடும், சதுரப்பாடுடையார்க்கு அல்லது இல்லை. ''நந்து'' என்னும் தொழிற்பெயர் விகாரத்துடன் ''நத்து''
என்றாய் பின் ''அம்'' என்னும் பகுதிப் பொருள் விகுதிபெற்று ''நத்தம்'' என்று
ஆயிற்று. ''போல்'' என்பது ஈண்டு உரையசை. ''ஆகும்'' என்பதனை
முன்னும் கூட்டி, ''அரிது'' என்பதனைத் தனித்தனி கூட்டி உரைக்க. ஆக்கமாகும் கேடாவது; புகழ் உடம்பு செல்வம் எய்தப் பூதஉடம்பு நல்கூர்தல். உளதாகும் சாக்காடாவது; புகழ்
உடம்பு நிற்கப் |