வான்றுபுரி யடக்கத்துக் கண்ணி நெற்றியர் கைதொழூஉப் புகுதரக் களிறுவழங்கு தடக்கையிற் காண்வரக் கொண்ட வெள்ளேட் டங்கண் வித்தக மெழுதிய கடையெழுத் தோலைக் கணக்குவரி காட்டி முன்னுறு கிளவியிற் பண்ணுறப் பணிக்கலும் பன்மணி விளக்கும் பள்ளிக் கட்டிலும் பொன்னி னடைப்பையும் பூரண கலசமும் கவரியுங் கடகமுங் கதிர்முத் தாரமும் நிகரின் மாண்கல நிதியொடு நிறைந்த ஆரியச் செப்பும் யவனமஞ் சிகையும் பொன்செய் பேழையொடு பொறித்தாழ் நீக்கி நன்கனம் படுத்து நகுமலர் பரப்பி விரைவிரி யாளர் புரைவுறப் புணர்த்த பண்டம் புதைத்த வண்டுபடு வளநகர் மடையரு மகளிரு மல்லரு மமைச்சரும் கடையருங் கணக்கருங் காப்பரு முளப்பட இறைவினை திரியாப் பழவினை யாளரை வழிமுறை மரபிற்றந் தொழின்முறை நிறீஇ வாய்மொழி விதியின் மேவன வெல்லாம் நோக்கி மன்ன நுவலருங் காப்பின் அணிந்தது நகரெனப் பணிந்தவ ருரைக்கலும் குஞ்சரச் சேரிக் குமரற் கியற்றிய வெண்சுதை நல்லி லுறையு ளாக இடம்புகு தக்கன் றிருத்த னெடிதெனப் பேரியல் வையம் பின்செல வருளி வீரிய வேந்தன் விடுத்தகம் புக்கபின் விட்டுழல் யானை யச்ச நீக்கி வெறிகோள் பண்ணியுந் தொழிறலைப் பெயர்த்தவன் கலிகொ ளாவணங் கைதொழப் போகி அரைமதி

|