யிரும்பொடு கவைமுட் கரீஇ பீலி சுற்றிய வேணு வெண்காழ் யானை யிளையரைத் தானத்துப் பிணிக்கெனத் தகைமலி வேழந் தலைக்கடை யிழிதந் தகம்புக் கனனா லரசவை விடுத்தென் அரசவை விடுத்தபி னணிநகர் முன்னித் தொடர்பூ மாலைக் கடைபல போகி அந்தக் கேணியு மெந்திரக் கிணறும் தண்பூங் காவுந் தலைத்தோன் றருவிய வெண்சுதைக் குன்றொடு வேண்டுவ பிறவும் இளையோர்க் கியற்றிய விளையாட் டிடத்த சித்திரப் பூமி வித்தக நோக்கி ஒட்டாக் கிளைஞரை நட்பினுட் கெழீஇய ஐயிரு பதின்ம ரரக்கி னியற்றிய பொய்யி லன்ன பொறியிவன் புணர்க்கும் கையுங் கூடுங் கால மிதுவென ஐய முற்று மெய்வகை நோக்கிச் சிறப்புடை மாணகர்ச் செல்வங் காண்கம் உழைச்சுற் றாளரைப் புகுத்துமின் விரைந்தெனத் தலைக்கூட் டுபாயமொடு தக்கோன் றெரிந்து முட்டு முடுக்கு மிட்டிடை கழியும் கரப்பறை வீதியுங் கள்ளப் பூமியும் மரத்தினு மண்ணினு மதியோர் புணர்க்கும் எந்திர மருங்கி னிழுக்க மின்மை அந்நிலை மருங்கி னாசற நாடி வஞ்ச மின்மை நெஞ்சிற் றேறிச் சந்தன வேலிச் சண்பகத் திடையதோர் வேங்கையொடு தொடுத்த விளையாட் டூசற் றூங்குபு மறலு முழைச்சிறு சிலதியர் பாடற் பாணியொ டளைஇப் பல்பொறி ஆடியன் மஞ்ஞை யகவ வயலதோர் வெயில்கண் போழாப்

|