பயில்பூம் பொதும்பிற் சிதர்தொழிற் றும்பியொடு மதர்வண்டு மருட்ட மாத ரிருங்குயின் மணிநிறப் பேடை காதற் சேவலைக் கண்டுகண் களித்துத் தளிப்பூங் கொம்பர் விளிப்பது நோக்கியும் பானிறச் சேவல் பாளையிற் பொதிந்தெனக் கோண்மடற் கமுகின் குறிவயிற் காணாது பவழச் செங்காற் பன்மயி ரெருத்திற் கவர்குர லன்னங் கலங்கல் கண்டும் தனித்துளங் கவல்வோன் றான்வீழ் மாதர் மணிக்கேழ் மாமை மனத்தின் றலைஇப் புள்ளுப்புலம் புறுக்க வுள்ளுபு நினைஇ மன்றனா றொருசிறை நின்ற பாணியுட் சென்றுசென் றிறைஞ்சிய சினந்தீர் மண்டிலம் சூடுறு பாண்டிலிற் சுருங்கிய கதிர்த்தாய்க் கோடுய ருச்சிக் குடமலைக் குளிப்ப விலங்கும் பறவையும் வீழ்துணைப் படரப் புலம்புமுத் துகுத்த புன்மைத் தாகி நிறைகடன் மண்டில நேமி யுருட்டிய இறைகெழு பெருவிற லெஞ்சிய பின்றைக் கடங்கண் ணரிந்த கைய ராகி இடந்தொறும் பல்கிய மன்னர் போல வரம்பில் பன்மீன் வயின்வயின் விலங்கிப் பரந்துமீ தரும்பிய பசலை வானத்துத் தலைத்தேர்த் தானைக்குத் தலைவனாகி முலைப்பாற் காலத்து முடிமுறை யெய்திக் குடைவீற் றிருந்த குழவி போலப் பொழில்கண் விளக்குந் தொழினுகம் பூண்டு புயன்மாசு கழீஇப் புனிற்றுநா ளுலவாது வியன்கண் மாநிலந் தாங்கவிசும் பூர்ந்து பைந்தொடி மகளிர் பரவினர் கைதொழச் செங்கோட் டிளம்பிறை செக்கர்த் தோன்றித் தூய்மை காட்டும் வாய்மைமுற் றாது மதர்வை யோர்கதிர் மாடத்துப் பரத்தரச் சுடர்வெண் ணிலவின் றொழிற்பயன் கொண்ட மிசைநீண் முற்றத் தசைவளி போழ விதானித்துப் படுத்த வெண்கா லமளிச்

|