பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   6
Zoom In NormalZoom Out


 

சேக்கை மகளிர் செஞ்சாந்து புலர்த்தும்
தேக்க ணகிற்புகை திசைதொறுங் கமழக்
கன்றுகண் காணா முன்றிற் போகாப்
பூத்தின் யாக்கை மோ..................
................குரால் வேண்டக் கொண்ட
சுரைபொழி தீம்பா னுரைதெளித் தாற்றிச்
சுடர்பொன் வள்ளத்து மடல்விரற் றாங்கி
மதலை மாடத்து மாண்குழை மகளிர்
புதல்வரை மருட்டும் பொய்ந்நொடி பகரவும்
இல்லெழு முல்லையொடு மல்லிகை மயங்கிப்
பெருமணங் கமழவும் பிடகைப் பெய்த
வதுவைச் சூட்டணி வண்டுவாய் திறப்பவும்
பித்திகக் கோதை செப்புவாய் மலரவும்
அறவோர் பள்ளி யந்திச் சங்கமும்
மறவோன் சேனை வேழச் சங்கமும்
புதுக்கோள் யானை பிணிப்போர் கதமும்
மதுக்கோண் மாந்த ரெடுத்த வார்ப்பும்
மழைக்கட லொலியின் மயங்கிய மறுகின்
விளக்கொளி பரந்த வெறிகமழ் கூலத்துக்
கலக்கத வடைத்து மலர்க்கடை திறப்பவும்
ஒளிறுவே லிளையர் தேர்நீ றளைஇக்
களிறுகா லுதைத்த புஞ்சப் பூழியொடு
மான்றுக ளவிய மதுப்பலி தூவவும்
தெற்றி முதுமரத் துச்சிச் சேக்கும்
து.........க.........ரக் குரலளைஇச்
சேக்கை நல்லியாழ் செவ்வழி பண்ணிச்
செறிவிரற் பாணியி னறிவரப் பாடவும்
அகினா றங்கை சிவப்ப நல்லோர்
துகிலின் வெண்கிழித் துய்க்கடை நிமிடி
உள்ளிழு துறீஇய வொள்ளடர்ப் பாண்டிற்
றிரிதலைக் கொளீஇ யெரிதரு மாலை
வெந்துயர்க் கண்ணின் வேலிட் டது