கிழிப்பத் தனித்தொழி பிணையி னினைப்பன ணின்ற எல்லொளிப் பாவையைக் கல்லெனச் சுற்றி அளகமும் பூணு நீவிச் சிறிதுநின் திலக வாணுதற் றிருவடி வொக்கும் பிறையது காணா யிறைவளை முன்கை திருமுகை மெல்விரல் கூப்பி நுந்தை பெரும்பெயர் வாழ்த்தாய் பிணையென் போரும் செம்பொன் வள்ளத்துத் தீம்பா லூட்டும் எம்மனை வாரா ளென்செய் தனளெனப் பைங்கிளி காணாது பயிர்ந்துநிற் கூஉம் அஞ்சொற் பேதா யருளென் போரும் மதியங் கெடுத்து மாவிசும் புழிதரும் தெறுதரு நாகநின் றிருமுகங் காணிற் செறிதலு முண்டினி யெழுகென் போரும் பிசியு நொடியும் பிறவும் பயிற்றி நகைவல் லாய நண்ணினர் மருட்டி முள்ளெயி றிலங்கு முறுவ லடக்கிச் சொல்லெதிர் கொள்ளாண் மெல்லிய லிறைஞ்சிப் பந்தெறி பூமியுட் பாணி பெயர்ப்புழி அஞ்செங் கிண்கிணி யடியலைத் தனகொல் திருக்கிளர் வேங்கையும் பொன்னும் பிதிர்ந்து மருப்பியல் செப்புங் குரும்பையு மிகலி உருத்தெழு மென்முலை முத்தலைத் தனகொல் பிணைய லலைப்ப நுதனொந் ததுகொல் இனையவை யிவற்றுள் யாதுகொ லிந்நோய் பெருங்கசி வுடையளிப் பெருந்தகை மகளெனத் தவ்வையுந் தாயுந் தழீஇயினர் கெழீஇச் செல்வி யிலளெனச் சேர்ந்தகம் படுப்பச் செம்பொன் விளக்கொடு சேடியர் முந்துறத் திண்ணிலைப் படுகா றிருந்தடிக் கேற்ற மணிக்கல மொலிப்ப மாட மேறி அணிக்காற் பவழத் தியவன ரியற்றிய மணிக்காழ் விதானத்து மாலை

|