பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   11
Zoom In NormalZoom Out


 

யோகத் தஞ்சனம் வகுத்துக்
கமழ்கொள் பூமியிற் கபிலை முன்னிறீஇ
மகடூஉத் துறந்த மாசறு படிவத்துத்
துகடீ ராளர்க்குத் துளக்கிய முடியன்
மலர்கண் ணளைஇய மந்திர நறுநீர்
பலருடன் வாழ்த்தப் பண்புளி யெய்திப்
பால்பரந் தன்ன வால்வெள் விதானத்து
மாலை தொடர்ந்த மங்கலப் பந்தர்
விரிநூ லந்தணர் வெண்மணை சூழ்ந்த
திருமணிக் கட்டிற் றிறத்துளி யெய்தி
அறநிலை பெற்ற வருள்கொ ளவையத்து
நிறைநூற் பொத்தக நெடுமணை யேற்றி
வல்லோர் வகுத்து வாசனை வாக்கியம்
பல்லோர் பகரப் பயம்பல பருகித்
தரும விகற்பமொடு தானை யேற்பும்
கரும விகற்பமொடு காமமுங் கெழீஇய
இன்பக் கேள்வி யினிதுகொண் டெழீஇத்
துன்ப நீங்குந் தொழின்முறை போக்கி
முடிகெழு மன்னரொடு முற்றவை நீங்கிக்
கடிபெருங் கோயிலுட் காட்சி விரும்பி
உதயண குமரனை யுழைத்தரல் விரைந்தென
உழைநிலை யாள ரோடின ரிசைப்ப
இழையணி யிரும்பிடி யெருத்த மேறிக்
கடையணி யாவணங் கைதொழப் போதந்
தெறிவேற் பெருங்கடை யியைந்தன னிற்பத்
தருமணன் முற்றத்துத் தானெதிர் சென்று
திருமணி யம்பலங் கொண்டொருங் கேறி
இரட்டைத் தவிசி னிருக்கை காட்டி
இசைக்க வேண்டா விதையுன தில்லெனச்
சிறப்புடைக் கிளவி செவ்விதிற் பயிற்றித்
தளரிய லாயமொடு தன்புடை நின்ற
பணியோள் பற்றிய பவழச்