மணிக்கயிற் றூசன் மறலிய விடத்தும் கொய்ம்மலர்க் காவும் பொய்கைக் கரையும் அந்தக் கேணியும் வந்துபெயர் கூவித் தவ்வை மகளிருந் தாய்கெழு பெண்டிரும் அவ்வழி யாயமு நொய்தகப் படுப்ப முத்தின ருத்தியர் மும்மணிக் காசினர் கச்சினர் கண்ணியர் கதிர்வெள் வளையினர் சில்கலத் தியன்ற வணியின ரல்லது பல்கலஞ் சேரா மெல்லென் யாக்கையர் அசைவில் குமரரை யாடிடத் தணங்கு நசையுட் கொண்ட நன்மை யியன்று விழுத்தகைத் தெய்வம் வழுத்தா மரபிற் றார்ப்பொலி மேனிக் கூர்ப்பணங் கொடுக்கிய மண்டு தணிதோண் மாசின் மகளிர் பெண்டுணை சார்வாக் கண்டுழிக் கலங்கிக் கடைக்கண் சிவப்புங் கதிர்முலை யுருப்பும் மடக்காக் கூழையு மருங்குலும் பற்றிப் புதையிருந் தன்ன கிளரொளி வனப்பினர் அரங்கொல் கிண்கிணி யிரங்க வொல்கிப் பொற்கிடுகு செறிந்து போர்வை முற்றி முத்துக்காழ் தொடர்ந்த சித்திரக் கூடத்துப் பவழக் கொடுங்காழ் பத்திமுகத் தழுத்தித் திகழ்கோட் டியன்ற திமிசுகுடப் பொற்கால் உரிமைச் சுற்றத் துரியோர்க்குத் திறந்த திருமணி யம்பலத் திமிழ்முழாத் ததும்பும் அரங்க நண்ணி யரிமா சுமந்த மரகதத் தியன்ற மணிக்காற் கட்டில் நூல்வினை நுனித்த நுண்டொழி லாளர் வாலரக் கூட்டிய வானூ னிணவைப் பால்பரந் தன்ன பஞ்சி மெல்லணைச் சேக்கை மெலியச் செம்மாந் திருந்த முடிகெழு தந்தை முன்னர்த் தோன்றி அடிதொழு திறைஞ்சிய வவரிடை யெல்லாம் தெய்வத் தாமரைத் திருமகட்

|