பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   17
Zoom In NormalZoom Out


 

சொத்துற் றமைந்த சுதையில் செஞ்சுவர்
வெண்கோட்டு நெடுந்தூண் விதானந் தூக்கித்
தேநவின் றோங்கிய திருநா றொருசிறைக்
கீத சாலை வேதி நிறைய
மல்லற் சுற்றமொடு கல்லெனப் புகுதந்
தரக்குப் பூமி யாயமொ டேறிப்
பரப்புமல ரொருசிறைப் பாவையை நிறீஇப்
பண்ணமை நல்லியாழ்ப் பலிக்கடன் வகீஇய
அண்ணல் வருகென வவ்வயி னோடி
ஒண்டொடி மகளிர் கொண்டகம் புகுதரத்
தானைத் தவிசிற் றகையோ னேற
ஏனைத் தவிசி னங்கையை யிருத்தினர்
இன்னா ளென்ப திவனு மறியான்
........................
நன்னர்க் கிளவி நயவரப் பயிற்றி
ஆசான் கொடுக்கு மரும்பெறல் விச்சை
காண்போர் செய்யுங் கடப்பா டிதுவென
வெள்வளை முன்கை தோழியர் பற்றி
ஒள்ளிழை மாத ரொழுக்கஞ் செய்கெனக்
காந்த ளழித்த கைம்முகிழ் கூப்பிக்
கஞ்சிகை திறந்த பொழுதி னன்றுதன்
காட்சிக் கொத்த கள்வ னாதலின்
மேற்படு நோக்கமொ டிருவரு மெய்தி
ஏப்பெறு துயரமொ டிலங்கிழை யிறைஞ்சிப்
பொற்காற் படுத்துப் பூந்துகில் வளைஇக்
கைக்கோற் சிலதரொடு கன்னியர் காப்பத்
தெய்வத் தன்ன திறலோன் காட்டக்
கைவைத் தனளாற் கனங்குழை யாழென்
கைவைத் தமைந்த கனங்குழைக் கவ்வியாழ்
வைக றோறும் வத்தவன் காட்ட
நிகழ்வதை யுரைக்கும் புகர்ச்சொன் மாக்கள்
ஒன்னலர் நுழையா வுரிமை மாணகர்த்
தன்மக ளொருத்தியைத் தானயாழ் கற்கென
ஏதின் மன்னனை யெண்ணான் றெளிந்த
பேதை மன்னன் பின்னுங்