பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   20
Zoom In NormalZoom Out


 

பரிசத்
தியாழ்முத லாக வறுபத் தொருநான்
கேரிள மகளிர்க் கியற்கையென் றெண்ணிக்
கலையுற வகுத்த காமக் கேள்வித்
துறைநெறி போகிய தோழித் தூதினர்
அரசர்க் காயினு மடியர்க் காயினும்
அன்றை வைகல் சென்றோர்ப் பேணிப்
பள்ளி மருங்கிற் படிறின் றொழுகும்
செல்வ மகளிர் சேரி நண்ணி
வயக்களி றடக்கிய வத்தவர் பெருமகன்
இயக்கரும் வீதியி னெதிர்ப்பட வொருநாள்
நயப்புற் றரற்று நருமதை யென்னும்
நாடகக் கணிகை மாடம் யாதெனத்
தாயுறை வியனகர்த் தன்குறை யுரைத்து
வாயி லாகிய வயந்தகன் புகலும்
செந்நூ னிணந்த சித்திரக் கம்மத்து
வெண்கா லமளி விருப்பி னேற்றி
அணியிழை மகளிரும் யானையும் வணக்கும்
மணியொலி வீணையுஞ் சாபமு மரீஇக்
கழறொடி கலைஇய கலம்பொழி தடக்கை
உதயண குமர னுள்ளத் துளளெனின்
ஒண்டொடி மாதரு மொருதுணை யோருட்
பெண்டுணை சான்ற பெருமைபெற் றனளென்
மருமகற் புகலு மனம்புரி கொள்கை
இருமூ தாட்டி யெனக்கு முண்டெனத்
தூண்டி லிரையிற் றுடக்குள் ளுறுத்துத்
தேன்றோய்த் தன்ன தீஞ்சொ லளைஇப்
பொருளெனக் கருதிப் பொன்னிவண் விடுத்தோன்
அருளியு மருளா னடித்தி மாட்டெனக்
காரணக் களிவி நீர கூறித்
தற்பெயர் பெயர்ப்ப மனத்தகை கரந்து
பிற்பயங் கருதும் பெருநசைக் கிளவி
இன்னகைத் தோழற் கினிய பயிற்றி
ஆங்கினி திருந்த போழ்திற் பூங்குழை
காமுறப் பட்ட சேணிகச் சிறுதொழில்
கற்றது மில்லாச் சிற்றறி வாளன்
பொய்யொடு மிடைந்த பொருணசைக் கடுஞ்சொல்
மையுண்டு கழுமிய மாசுபடு கலிங்கத்
திளையோர் வைகா விழுக்கரு வாழ்க்கையன்
கவறா டாளர்க்குக் கலந்தொலை வெய்திக்
கொடையகத் தோனெனக் கடைகழிந் தோடிக்
கவலையிற்