செலலுங் கவ்வையின் விலக்கி ஐயன் வந்த வாசறு கருமம் கைவளை மாதர் களைந்துசென் றீயென நிதியங் காட்டப் பொதியொடு சிதறிக் குறையொடு வந்தவக் குமரன் கேட்க சிறியனேன் வந்தவச் சிறுநில மன்னற் கம்மனை நயந்தியா னவ்வயிற் சேறல் எம்மனை மருங்கி னில்லெனச் சீறித் தன்றுறைக் கொவ்வாத் தகையில் கிளவி பைந்தொடி மாதர் பண்பில பயிற்றத் தாயப் பெண்டிருந் தந்துணை யோருமென் றோரி லெழுகிளை யுடன்றொக் கீண்டிப் பழமையிற் பசையாது கிழமையிற் கெழுவாது தவந்தீர் மருங்கிற் றிருமகள் போலப் பயந்தீர் மருங்கிற் பற்றுவிட் டொரீஇ இட்டதை யுண்ணு நீலம் போல ஒட்டிடத் தொட்டு முறுதி வாழ்க்கையுட் பத்திமை கொள்ளார் பைந்தொடி கேளென எடுத்தியல் கிளவியோ டேதுக் காட்டித் தொடிக்கேழ் முன்கைத் தொகுவிரன் மடக்கி மாநிதி வழங்கு மன்னரிற் பிறந்து ..........வேண்டியது முடிக்கும் கால மிதுவெனக் காரணங் காட்டும் ஆர்வச் சுற்றத் தவர்வரை நில்லாள் தாய்கை விதிர்ப்பத் தலைபுடைத் திரங்கி ஏயது மறுக்கலு மிருந்தோற் கூய்நின் அடியரிற் பற்றி யாணையிற் கொள்கெனக் கடிதியல் வையங் கவ்வையி னேற்றிக் கொடியணி கூலங் கொண்டனன் போவுழி வலிதி னென்னை வத்தவர் பெருமகன் கொலிய செய்வது குழுக்கள் காண்கெனப் பூசற் கிளவி சேயிழை பயிற்ற மாரியுந் திருவு மகளிர் மனமும் தக்குழி நில்லாது பட்டுழிப் படுமெனும் கட்டுரை யன்றியுங் கண்டனம் யாமென விச்சையும் வனப்பும் விழுக்குடிப் பிறப்பும் ஒத்தொருங் கமைந்த வுதயண குமரனைப் பெற்றன ளாயினும் பிறர்க்குநைந்

|