புணை நீந்தி நொந்துநொந் தழியு நோன்புபுரி யாக்கையர் அருஞ்சுரக் கவலையு மடவியும் யாறும் பெருஞ்சின வீர ரொருங்குடன் பேர்வுழி வென்றடு சிறப்பின் வீணை வித்தகன் ஒன்றிய தேவியை யுள்குவன னாகிச் செறிந்த மருங்கிற் றிரிமருப் பிரலை புறந்தற் காப்பப் புணர்மறி தழீஇய மடமா னம்பிணை கண்டுமாதர் கடைபோழ் நெடுங்கட் காம நோக்கம் உள்ளத் தீர வொள்ளழ லுயிரா இனத்திற் கெழீஇ யின்ப மகிழ்ச்சியொடு புனத்திற் போகாது புகன்றுவிளை யாடும் மான்மடப் பிணையே வயங்கழற் பட்ட தேனேர் கிளவி சென்ற வுலகம் அறிதி யாயின் யாமு மங்கே குறுகச் செல்கங் கூறா யெனவும் பணிவரை மருங்கிற் பாறை தோறும் மணியிரும் பீலி மல்க வுளரி அரும்பெற லிரும்போத் தச்சங் காப்ப மதநடை கற்கு மாமயிற் பேடாய் சிதிர்மலர்க் கூந்தற் செந்தீக் கவர மயர்வனள் விளிந்தவென் வஞ்சி மருங்குல் மாறிப் பிறந்துழி மதியி னாடிக் கூறிற் குற்ற முண்டோ வெனவும் வெஞ்சுரஞ் செல்வோர் வினைவழி யஞ்சப் பஞ்சுர வோசையிற் பையெனப் பயிரும் வெண்சிறைச் செங்கா னுண்பொறிப் புறவே நுண்சிறு மருங்கு னுகர்வின் சாயற் பாசப் பாண்டிற் பல்கா ழல்குலென் வாசவ தத்தை யுள்வழி யறியின் ஆசை தீர வவ்வழி யடைகேன் உணரக் கூறா யாயிற் பெடையொடு புணர்வு விரும்பல் பொல்லா தெனவும் பசைந்துழிப் பழகல் செல்லாது பற்றுவிட் டுவந்துழித் தவிரா தோடுதல் காமுறும் இளையோ ருள்ளம் போலத் தளையவிழ்ந் தூதுமல ரொழியத் தாதுபெற நயந்து கார்ப்புன மருங்கி னார்த்தனை திரிதரும் அஞ்சிறை

|