யறுகாற் செம்பொறி வண்டே எரியுள் விளிந்தவென் வரிவளைப் பணைத்தோள் வள்ளிதழ்க் கோதை யுள்ளுழி யுணரிற் கவற்சி வகையிற்பெயர்த்தனை களைஇயர் அரும்பூங் கோதைப் பூந்தா துண்டவள் அவிழ்பூங் கூந்தலுண் மகிழ்துயில் வெய்தி நீயு மெவ்வந் தீர யானும் நல்லிள வனமுலை புல்லுபு பொருந்த உய்த்தனை காட்டுதி யாயிற் கைம்மா றித்துணை யென்பதொன் றில்லென விரங்கியும் பொங்குமழை தவழும் பொதியின் மீமிசைச் சந்தனச் சோலைதொறுந் தலைச்சென் றாடி அசும்பிவ ரடைகரைப் பசுந்தோ டுளரிச் சுள்ளிவெண் போது சுரும்புண விரித்து மணிவாய் நீலத் தணிமுகை யலர்த்தி ஒண்பூங் காந்த ளுழக்கிச் சந்தனத் தந்த ணறுமல ரவிழ மலர்த்தி நறுங்கூ தாளத்து நாண்மல ரளைஇக் குறுந்தாட் குரவின் குவிமுகை தொலைச்சி முல்லைப் போதி னுள்ளமிழ் துணாஅப் பல்பிட வத்துப் பனிமலர் மறுகிப் பொற்றார்க் கொன்றை நற்றாது நயந்து சாத்துவினைக் கம்மியன் கூட்டுவினை யமைத்துப் பல்லுறுப் படக்கிய பையகங் கமழ எல்லுறு மாலை யிமயத் துயர்வரை அல்குதற் கெழுந்த வந்தண் டென்றால் செவ்வழித் தீந்தொடை சிதைந்தன கிளவியென் எல்வளைத் தோளியை யெவ்வழி யானும் நாடிச் சென்றவள் சேடிள வனமுலைக் குழங்கற் சாந்திடைக் குளித்துவிளை யாடியென் அழுங்க னெஞ்சத் தயாஅநோய் தீர மயர்வெனை மாற்றுதி யாயி னின்மாட் டுயர்வுள வியற்கை யொழியுமோ வெனவும் இன்னவை பிறவு மன்னவை கண்டோர் அவல

|