வர் மலிந்த மூதூர் வெறிது சேறல் விழுப்ப மன்றெனக் கான வாழைத் தேனுறு கனியும் அள்ளிலைப் பலவின் முள்ளுடை யமிர்தமும் திரடாண் மாஅத்துத் தேம்படு கனியும் வரைதாழ் தேனொ டுகாஅய்விரை சூழ்ந்து மணியு முத்து மணிபெற வரன்றிப் பணிவில் பாக்கம் பயங்கொண்டு கவரா நிறைந்துவந் திழிதரு நீங்காச் செல்வமொடு சிறந்த சீர்த்திக் குறிஞ்சி கோலிக் கல்லென் சும்மையொடு கார்தலை மணந்த முல்லை முதுதிணைச் செல்வ மெய்திப் பாலையு நெய்தலும் வேலி யாகக் கோல மெய்திக் குறையா வுணவொடு துறக்கம் புரியுந் தொல்லையி னியன்றது பிறப்பற முயலும் பெரியோர் பிறந்தது சிறப்பிடை யறாத தேசிக முடையது மறப்பெருந் தகையது மாற்றோ ரில்லது விறற்புக ழுடையது வீரிய மமைந்த துலகிற் கெல்லாந் திலகம் போல்வ தலகை வேந்த னாணை கேட்ப தரம்பு மல்லலுங் கரம்பு மில்லது செல்வப் பெருங்குடி சிறந்தணி பெற்றது நல்குர வாளரை நாடினு மில்லது நன்பெரும் புலவர் பண்புளி பன்னிய புகழ்ச்சி முற்றா மகிழ்ச்சியின் மலிந்த தின்னவை பிறவு மெண்ணுவரம் பிகந்த மன்பெருஞ் சிறப்பின் மகதநன் னாடு சென்றுசார்ந் தனராற் செம்மலொ டொருங்கென். மன்பெருஞ் சிறப்பின் மகதநன் னாடு சென்று சார்ந்தபின் வென்றியிற் பெருகி யாறுங் குளனும் வாய்மணந் தோடித் தண்டலை தோறுந் தலைபரந் தூட்டி வண்டிமிர் பொய்கையும் வாவியுங் கயமும் கேணியுங் கிணறு நீணிலைப் படுவும் நறுமலர் கஞலி யுறநிமிர்ந்

|