உலகப் பல்லுயிர்க் கலகை யாகிப் பெருந்தகை வேள்வி யருந்தவப் படிவமொடு தந்தொழி றிரியாத் தரும நெஞ்சின் அந்தணர் சேரி யகவித ழாக இருநில வரைப்பி னெதிர்ப்போ ரின்றி அருநிலை யுலகி னாட்சி விறப்பினும் பெரும்படைக் கொற்றம் பீடழிந்து சுருங்கா அரும்படை மன்ன ராற்றலி னெருங்கத் தலைமையின் வழீஇய நிலைமை யெய்தினும் உற்றது முடிக்கு முறுதி நாட்டத்துக் கற்றுப்பொரு டெரிந்த கண்போற் காட்சி அருமதி யமைச்சர் திருமதிற் சேரி மாசில் மைந்தாது சுமந்த மத்தகத் தாசில் பன்மல ரல்லி யாகச் சுடுகதி ரணிந்த சூழ்கதிர்ச் செல்வன் விடுசுடர்ப் பேரொளி விமானம் போலச் சேணொளி திகழு மாண்வினை மாடம் வேண்டிய மருங்கிற் காண்டக நெருங்கிச் செஞ்சுடர் மணிமுடி திகழுஞ் சென்னிப் பைந்தலை நாகர் பவணங் கடுப்பக் காப்பின் றாயினுங் கண்டோ ருட்கும் யாப்புடைப் புரிசை யணிபெற வளைஇ அருமணிப் பைம்பூ ணரசகத் தடைந்து வாயி லணிந்த வான்கெழு முற்றத்துக் கோயில் கொட்டை யாகத் தாமரைப் பூவொடு பொலியும் பொலிவிற் றாகி அமையாச் செய்தொழி லவுணர்க் கடந்த இமையாச் செங்க ணிந்திர னுறையும் அமரா பதியு நிகர்தனக் கின்றித் துன்ப நீக்குந் தொழிலிற் றாகி இன்பங் கலந்த விராச கிரியமென் றெண்டிசை மருங்கினுந் தன்பெயர் பொறித்த மன்பெருஞ் சிறப்பின் மல்லன் மாநகர் சாரச் சென்றதன் சீர்கெழு செல்வமும் விள்ளா விழுச்சீர் விச்சா தரருறை வெள்ளியம் பெருமலை யன்ன விளங்கொளி மாட மறுகின் மயங்கொளிக் கழுமலும் நீடுபுகழ்க் குருசி னெஞ்சிடை நலிய வள்ளிதழ்க் கோ

|