தை வாசவ தத்தையை உள்ளுபு திருநகர் புக்கன னுலந்தென் உள்ளுத லானா துள்ளகஞ் சுருங்கிய வள்ளிதழ் நறுந்தார் வத்தவன் றன்னொடு விண்ணுற நிவந்த பண்ணமை படைமதில் வாயிலு மருங்கிலுங் காவல் கண்ணி வேந்துபிழைத் தொழுகினுங் காய்ந்து கலக்கறாஅ முழுப்பரி சார முதற்க ணெய்தி விழுப்பெருஞ் செல்வமொடு வென்றி தாங்கிய ஐம்பதி னிரட்டி யவனச் சேரியும் எண்பதி னிரட்டி யெறிபடைப் பாடியும் அளப்பருஞ் சிறப்பி னாயிர மாகிய தலைப்பெருஞ் சேனைத் தமிழச் சேரியும் கொலைப் பெருங் கடுந்திறற் கொல்லர் சேரியும் மிலைச்சச் சேரியுந் தலைத்தலை சிறந்து வித்தக வினைஞர் பத்தியிற் குயிற்றிய சித்திர சாலையு மொத்தியைந் தோங்கிய ஒட்டுவினை மாடமுங் கொட்டுவினைக் கொட்டிலும் தண்ணீர்ப் பந்தருந் தகையமை சாலையும் அறத்தியல் கொட்டிலு மம்பலக் கூடமும் மறப்போர்க் கோழி மரபிற் பொருத்தும் விறற்போ ராடவர் விரும்பிய கண்ணும் மறக்களி யானை வடிக்கும் வட்டமும் கடிசெல் புரவி முடுகும் வீதியும் அடுத்தொலி யறாஅ வரங்கமுங் கழகமும் அறச்சோற் றட்டிலு மம்பலச் சாலையும் தேவகுலனுந்தேசிகப்பாடியும் மாவுந்தேருமயங்கிய மறுகும் காவுந் தெற்றியுங் கடவுட் பள்ளியும் தடவளர் செந்தீ முதல்வர் சாலையும் வேண்டிடந் தோறுங் காண்டக நெருங்கி ஆதி யாகியமைந்தவனப் பெய்தி மயங்கிய மாந்தர்த் தாகி யார்க்கும் இயங்குதற் கின்னாப் புறம்பணைச் சேரியும் அந்தண் பாடியு மணுகி யல்லது வெந்திறல் வேகமொடு விலக்குதற் கரிய ஐங்கணைக் கிழவ னமர்ந்துநிலை பெற்ற எழுதுவினைத்

|