பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   259
Zoom In NormalZoom Out


 

மன்னவன்
தணியா வேகத்துத் தருசகன் றங்கை
பசும்பொற் கிண்கிணி பரடுசுமந் தரற்ற
அசும்பம றாமரை யலைத்த வடியினள்
சிறுபிடித் தடக்கையிற் செறிவொடு புணர்ந்து
மென்மையி னியன்று செம்மைய வாகி
நண்புவீற் றிருந்த நலத்தகு குறங்கினள்
மணியும் பவழமு மணிபெற நிரைஇய
செம்பொற் பாசிழை செறிய வீக்கிய
பைந்துகி லணிந்த பரவை யல்குலள்
துடிதோங் கூறிய விடுகிய நடுவிற்குப்
பார மாகிய வீரத் தானையள்
ஊக்க வேந்த னாக்கம் போல
வீக்கங் கொண்டு வெம்மைய வாகி
இலைப்பூண் டிளைக்கு மேந்திள முலையள்
திலதஞ் சுடருந் திருமதி வாண்முகத்
தலரெனக் கிடந்த மதரரி மழைக்கட்
கதிர்வளைப் பணைத்தோட் கனங்குழைக் காதிற்
புதுமலர்க் கோதை புனையிருங் கூந்தற்
பதுமா பதியெனும் பைந்தொடிக் கோமகள்
கன்னி யாயந் துன்னுபு சூழ
மதிற்புறங் கவைஇய புதுப்பூங் காவின்
மகர வெல்கொடி மகிழ்கணைக் காமற்கு
நகரங் கொண்ட நாளணி விழவினுள்
எழுநா டோறுங் கழுமிய காதலொடு
வழிபா டாற்றிய போதரு மின்றென
அழிகவுள் வேழத் தணியெருத் தேற்றிய
இடியுமிழ் முரசி னிருங்கண் டாக்கி
வடிவேற் கொற்றவன் வாழ்கெனப் பல்லூழ்
அணித்திரட் கந்தின் மணிப்பொற் பலகைச்
சித்திர முதுசுவர் வித்தக வேயுள்
ஆவணந் தோறு மறைந்தறி வுறுத்தலின்
இடையற வில்லாக் கடைமுத றோறும்
கைவ லோவியர் மெய்பெற வெழுதிய
உருவப் பூங்கொடி யொசிய வெடுத்துத்
தெருவு மந்தியுந் தெய்வச் சதுக்கமும்
பழமண னீக்கிப் புதுமணற் பரப்பி
விண்மிசை யுலகின் விழவமைந் தாங்கு
மண்மிசை யுலகின் மன்னிய சீர்த்தி
முழவு