மலி திருநகர் விழவுவினை தொடங்க அரும்பொறி நுனித்த யவனக் கைவினைப் பெரும்பொறி வையத் திருந்தியாப் புறீஇ மங்கலச் சாந்தின் மலர்க்கொடி யெழுதிப் பைம்பொற் பத்திரம் புளகமொடு வீக்கிக் கதிர்நகைத் தாம மெதிர்முக நாற்றிப் பத்திர மாலை சித்திர மாகப் புடைப்புடை தோறுந் தொடக்கொடு தூக்கிக் கட்டி தோய்த்த காழகி னறும்புகை பட்டுநிணர் கட்டிற் பல்படை குளிப்ப உள்ளக மருங்கின் விள்ளாக் காதற் றுணைநலத் தோழியர் துப்புர வடக்கி அணிநலத் தோழிக் கமைந்தன வியற்றி நெய்ந்நிறங் கொண்ட பைந்நிற மஞ்சளின் வைம்மருப் பணிபெற வண்ணங் கொளீஇக் கைவினைக் கண்ணி கவின்பெறச் சூட்டித் தகைமலர்ப் பொற்றார் வகைபெற வணிந்து காண்டகு வனப்பிற் காலியற் செலவிற் பாண்டில் வையம் பண்ணிப் பாகன் கோலுடைக் கையிற் கூப்புவன னிறைஞ்சி வையம் வந்து வாயி னின்றமை தெய்வ மாதர்க் கிசைமின் சென்றென இசைத்த மாற்றத் துரைப்பெதிர் விரும்பிப் போதுவிரி தாமரைத் தாதகத் துறையும் தீதுதீர் சிறப்பிற் றிருமக ளாயினும் உருவினு முணர்வினு மொப்புமை யாற்றாத் தெரியிழை யல்குற் றேமொழிக் குறுமகள் பாவையும் பந்துங் கழங்கும் பசும்பொற் றுதையு முற்றிலும் பேதை மஞ்ஞையும் கிளியும் பூவையுந் தெளிமணி யடைப்பையும் கவரியுந் தவிசுங் கமழ்புகை யகிலும் சாத்துக் கோயும் பூத்தகைச் செப்பும் இன்னவை பிறவு மியைய வேந்தி வண்ண மகளிர் வழிநின் றேத்திச் செண்ணச் சேவடி போற்றிச் சேயிழை மென்மெல விடுகெனப் பன்முறை பணிய ஒண்செங் காந்தட்

|