பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   263
Zoom In NormalZoom Out


 

தகை மன்னன்
செஞ்சுடர் முகத்தே செருமீக் கூரிய
வெஞ்சின வேந்தர்க்கு நஞ்சுமிழ் நாகத்துத்
தீயோ ரன்ன திறல வாகி
முளையேர் முறுவன் முகிழ்த்த சின்னகை
இளையோர் நெஞ்சிற் றளைமுதல் பரிந்தவர்க்
கமிழ்தம் பொதிந்த வருளின வாகித்
தலைப்பெருந் தாமரைச் செம்மல ரன்ன
நலத்தொடு புணர்ந்த விலக்கண நெடுங்கண்
வயப்பட லுற்று வயங்கிழை மாதர்
தானுங் கதுமென நேர்முக நோக்க
நெஞ்சிறை கொளீஇய நிறையமை நெடுந்தாழ்
வெந்தொழிற் காம வேட்கை திறப்பத்
திண்பொறி கலங்கித் திறல்வே றாகி
வேலை யெல்லைமீதூர்ந் திரண்டு
கோலப் பெருங்கடல் கூடி யாங்கும்
இசைந்த வனப்பி னேயர் மகற்கும்
பசைந்த காதற் பதுமா பதிக்கும்
யாப்புறு பால்வகை நீப்புற வின்றிப்
பிறப்புவழிக் கேண்மையிற் சிறப்புவழி வந்த
காமப் பெருங்கடல் கண்ணுறக் கலங்கி
நிறைமதி யெல்லைத் துறையிகந் தூர்தர
நன்னகர் கொண்ட தன்னமர் விழவினுட்
கரும்புடைச் செல்வன் விரும்புபு தோன்றித்
தன்னலங் கதுமெனக் காட்டி யென்னகத்
திருநிறை யளத்தல் கருதிய தொன்றுகொல்
அந்தண வடிவொடு வந்திவட்டோன்றி
மேவன நுகர்தற்கு மாயைபி னிழிதரும்
தேவ குமரன் கொல்லிவன் றெரியேன்
யாவனாயினு மாக மற்றென்
காவ னெஞ்சங் கட்டழித் தனனென
வெஞ்சின விடலையொடு நெஞ்சுமா றாடி
உலைப்பருந் தானை யுதயண குமரற்
கிலைக்கொழுந்து குயின்ற வெழில்வளைப் பணைத்தோள்
உரிய வாயின வுணர்மி னென்றுதன்
அரிமதர் நெடுங்க ணயனின் றோர்க்கும்
அறியக் கூறுத ல