மர்ந்தன போல நெறியிற் றிரியா நிமிர்ந்துசென் றாட வளங்கெழுமாவினிளந்தளி ரன்ன நயத்தகு மேனியு நல்லோர் நாடிய பயப்புள் ளுறுத்த படியிற் றாகக் கைவரை நில்லாப் பையு ளொடுக்கி உட்கு நாணு மொருங்குவந் தடைதர நட்புடைத் தோழி நண்ணுவன ளிறைஞ்ச மேதகு வையத்தின் மெல்லென விழிந்து தாதுகு புனைமலர்த் தண்பூங் காவினுட் சூடக முன்கைச் சுடர்க்குழை மகளிரொ டாடுதலானா வவாவொடு நீங்கி வனப்பெனப் படூஉந் தெய்வந் தனக்கோர் உருவுகொண் டதுபோற் றிருவிழை சுடரத் தன்னமர் தோழி தம்புறத் தசைஇ அன்ன நாண வண்ணலைக் கவற்றாப் பொன்னரிக் கிண்கிணி புடைபெயர்ந் தரற்ற அரிச்சா லேகத் தறைபல பயின்ற திருக்கிளர் மாடஞ் சேர்ந்துவலங் கொண்டு கழிபெருஞ் சிறப்பிற் கன்னி மகளிர் அழியுந் தான மவ்விடத் தருளி நான்முகன் மகளிர் நூன்முதற் கிளந்த ஒழுக்கிற் றிரியா ளுறுபொருள் வேண்டும் வழுக்கா வந்தணர் வருக யாவரும் விலக்கவு நீக்கவும் பெறீஇ ரென்றுதன் தலைத்தாண் முதியர்க்குத் தானே கூறி நோன்புமுத றொடங்கித் தேங்கமழ் கோதை தலைநாட் டானந் தக்கவை யளித்தலிற் பலநா ணோற்ற பயனுண் டெனினே வளமையும் வனப்பும் வண்மையுந் திறலும் இளமையும் விச்சையு மென்றிவை பிறவும் இன்பக் கிழமையு மன்பே ருலகினுள் யாவர்க் காயினு மடையு மடையினும் வார்கவுள் யானை வணக்குதற் கியைந்த வீணை விச்சையொடு விழுக்குடிப் பிறவரிது விழுக்குடிப் பிறந்திவ் வீறொடு விளங்கிய வழுக்கா மரபின் வத்தவர் பெருமகன் உதயண

|