பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   269
Zoom In NormalZoom Out


 

கொய்மலர்க் கண்ணி கொடுப்போள் போலக்
கனவிற் றோன்றக் கண்படை யின்றி
நனவிற் றோன்றிய நறுநுதற் சீறடி
மைவளர் கண்ணியை யெய்தும் வாயில்
யாதுகொ லென்றுதன் னகத்தே நினைஇ
வெங்கனன் மீமிசை வைத்த வெண்ணெயின்
நெஞ்ச முருக நிறுத்த லாற்றான்
காவினுட் காவலன் கலங்கக் கோயிலுட்
பாசிழை யல்குற் பாவையும் புலம்பித்
தாயில் கன்றி னாய்நலந் தொலைஇப்
புகையினுஞ் சாந்தினுந் தகையிதழ் மலரினும்
வாசங் கலந்த மாசி றிருமனை
ஆயஞ் சூழ வமளியு ளேறி
நறுமலர்க் காவினுட் டுறுமிய பூந்துணர்க்
கொடிக்குருக் கத்திக் கொழுந்தளிர் பிடித்து
நாண்மலர்ப் புன்னைத் தாண்முத லணைந்து
பருகு வன்ன நோக்கமொடு பையாந்
துருகு முள்ளமோ டொருமர னொடுங்கி
நின்றோன் போலவு மென்றோள் பற்றி
அகலத் தொடுக்கி நுகர்வோன் போலவும்
அரிமலர் நெடுங்க ணகவயிற் போகாப்
புரிநூன் மார்பன் புண்ணிய நறுந்தோள்
தீண்டும் வாயில் யாதுகொ லென்றுதன்
மாண்ட சூழ்ச்சி மனத்தே மறுகி
ஆசி லணியிழை தீயயல் வைத்த
மெழுகுசெய் பாவையி னுருகு நெஞ்சினள்
பள்ளி கொள்ளா ளுள்ளுபு வதிய
இருவயி னொத்த வியற்கை நோக்கமொ
டொருவயி னொத்த வுள்ள நோயர்
மல்லற் றானை வத்தவர் மன்னனும்
செல்வப் பாவையுஞ் செய்திற மறியார்
கொல்வது போலுங் குறிப்பிற் றாகி
எல்லி யாம மேழிருள் போலப்
பசுங்கதிர்த் திங்கள் விசும்பளந் தோடிக்
கடுங்கதிர்க் கனலி கக்குபு போகித்
தானொளி மழுங்கி மேன்மலை குளிப்ப